தமிழ் திரையுலகின் மூத்த இயக்குனர்களில் ஒருவரான பாரதிராஜா உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது நலமாக இருப்பதாகவும், தன்னை காண அனுமதி மறுக்கப்படுவதால் யாரும் பார்க்க வரவேண்டாம் என அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் பாரதிராஜா இயக்குனர் என்பதை தாண்டி, சமீப காலமாக நடிகராகவும் தன்னுடைய அசாத்திய நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் தனுஷ் நடிப்பில், இயக்குனர் மித்ரன் ஆர் ஜவகர் இயக்கத்தில் வெளியான 'திருச்சிற்றம்பலம்' படத்தில் தனுஷுக்கு தாத்தாவாக நடித்த கதாபாத்திரம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் வெற்றி கொண்டாட்டத்தில் இருந்த போது திடீர் என இயக்குனர் பாரதிராஜாவுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது.
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் பாரதிராஜா. அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால் தற்போது மேல் சிகிச்சைக்காக MGM மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது இவரது உடல்நிலை சீராக உள்ளதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து, பாரதிராஜா தன்னுடைய ரசிகர்களுக்காக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது...
மேலும் செய்திகள்: எதிர்பார்ப்பை எகிற வைத்த 'பகாசூரன்' செகண்ட் லுக்! நட்டியின் தோற்றம் வெளியானது..!
என் இனிய தமிழ் மக்களே,
வணக்கம். நான் உங்கள் பாசத்திற்குரிய பாரதிராஜா பேசுகிறேன். உடல்நலக் குறைவு காரணமாக சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நான் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் சிறப்பான சிகிச்சை மற்றும் கனிவான கவனிப்பின் காரணமாக நலம் பெற்று வருகிறேன்.
மருத்துவமனையில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்பதால் என்னை நேரில் காண வர வேண்டாம் என்று என் மேல் அன்பு கொண்ட அனைவரையும் பணிவோடு கேட்டுக்கொள்கிறேன். விரைவில் பூரண நலம் பெற்று உங்கள் அனைவரையும் நேரில் சந்திக்கிறேன்.
மேலும் செய்திகள்: நடிகர் விஜய் சேதுபதியின் உடன் பிறந்த சகோதரி ஜெயஸ்ரீயை யார் தெரியுமா? ஒரு தொழிலதிபரா.. பலரும் அறிந்திடாத தகவல்!
மருத்துவமனையில் நான் அனுமதிக்கப்பட்ட செய்தியை அறிந்தவுடன் நேரிலும் தொலைபேசி வாயிலாகவும் இணையதளம் மூலமும் அன்புடன் விசாரித்த மற்றும் நலம் பெற பிரார்த்தித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். விரைவில் சந்திப்போம். அன்புடன், பாரதிராஜா என குறிப்பிட்டுள்ளார்.
Sir's statement about his Health Issue! pic.twitter.com/15BnyKJdLn
— FDFS WITH MOGI (@FfsMogi)