வேற லெவல் நீங்க... தங்க மனசுக்காரி... 'பீஸ்ட்' பட நாயகி பூஜா ஹெக்டே செயலுக்கு குவியும் பாராட்டு..!

Published : Jul 29, 2021, 05:01 PM ISTUpdated : Jul 29, 2021, 05:02 PM IST
வேற லெவல் நீங்க... தங்க மனசுக்காரி... 'பீஸ்ட்' பட நாயகி பூஜா ஹெக்டே செயலுக்கு குவியும் பாராட்டு..!

சுருக்கம்

தளபதி விஜய்க்கு ஜோடியாக 'பீஸ்ட்' படத்தில் நடித்து வரும் நடிகை பூஜா ஹெக்டே, அறக்கட்டளை ஒன்றை துவங்கி அதன் மூலம் நலிந்த, ஏழை எளிய மக்களுக்கு உதவி வருவதாக கூறியதை தொடர்ந்து, இவருக்கு ரசிகர்கள் தங்களது பாராட்டுக்களை தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள்.  

தளபதி விஜய்க்கு ஜோடியாக 'பீஸ்ட்' படத்தில் நடித்து வரும் நடிகை பூஜா ஹெக்டே, அறக்கட்டளை ஒன்றை துவங்கி அதன் மூலம் நலிந்த, ஏழை எளிய மக்களுக்கு உதவி வருவதாக கூறியதை தொடர்ந்து, இவருக்கு ரசிகர்கள் தங்களது பாராட்டுக்களை தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள்.

தமிழில் இயக்குனர் மிஷ்கின் ஜீவாவை வைத்து இயக்கிய 'முகமூடி' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. இவர் நடித்த முதல் படமே படு தோல்வியடைந்ததால், வழக்கம் போல் இவரை மற்ற தமிழ் இயக்குனர்கள் கண்டு கொள்ளவே இல்லை. தமிழை தொடர்ந்து தெலுங்கு திரையுலகின் பக்கம் ஒதுங்கிய பூஜா ஹெக்டே தன்னுடைய அழகாலும், கவர்ச்சியால் ரசிகர்களை கவர்ந்தார்.

தற்போது தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் இவர், அல்லு அர்ஜுன், பிரபாஸ், போன்ற நடிகர்களின் முதல் சாய்ஸ் ஹீரோயினாக உள்ளார். அதே நேரத்தில் தற்போது அம்மணிக்கு ஹிந்தி பட வாய்ப்புகளும் அடுத்தடுத்து கதவை தட்ட துவங்கியுள்ளது. அந்த வகையில் ரன்வீர், மற்றும் சல்மான் கானுடன் நடிக்க உள்ளதாக செய்திகளும் வெளியாகியுள்ளது.

ஓய்வில்லாமல் நடித்து வரும் இவர், தற்போது மக்களுக்கு உதவ வேண்டும் என நண்பர்களுடன் சேர்ந்து  'All about Love ' என்கிற அறக்கட்டளை ஒன்றை துவங்கி உள்ளதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, மக்கள் தன் மீது காட்டும் அன்பையும், அவர்களால் கிடைக்கும் பணத்தையும், ஏதோ ஒரு வழியில் அவர்களுக்கு திரும்ப கொடுக்க விரும்புகிறேன். கொரோனா பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பே தன்னுடைய அறக்கட்டளை துவங்கப்பட்டு விட்டாலும் அந்த நேரத்தில் எந்த ஒரு பணியையும் செயல்படுத்தாததால் வெளியே கூற முடியவில்லை. 

மக்களை வாட்டி வதக்கிய கொரோனா நேரத்தில் எண்களின்  'All about Love ' அறக்கட்டளை மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவி, உணவு, உணவு பொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களை கொடுத்து உதவியுள்ளோம். இந்த கொரோனா நேரம் அன்பின் சக்தியை உணரவைத்து விட்டதாகவும், நாம் ஒருவர் மீது காட்டும் சிறிய அளவிலான அன்பு கூட பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார். மேலும் நலிந்த, ஏழை எளிய மக்களுக்காக இவர் செய்து வரும் செயலை ரசிகர்களும் மனதார பாராட்டி வருகிறார்கள்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!