மயிரிழையில் உயிர் தப்பிய அந்த அழகு நடிகை...! பதறவைக்கும் திக் திக் நிமிடங்கள்...!

Published : Aug 27, 2019, 01:26 PM ISTUpdated : Aug 27, 2019, 01:29 PM IST
மயிரிழையில் உயிர் தப்பிய அந்த அழகு நடிகை...!  பதறவைக்கும் திக் திக் நிமிடங்கள்...!

சுருக்கம்

அவரச குறுஞ்செய்தி அனுப்பினார், செய்தியை அறிந்து பதறிய அவர், கேரள வெளியுறவுத்துறை அமைச்சர் முரளிதரனிடம் தன் தங்கைக்கு உதவுமாறு கோரினார், இதனால் இமாச்சல் முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூரிடம் பேசி உதவி செய்வதாக அவர் உறுதியளித்தார். அதற்கிடையில் கடுமையான போராட்டத்திற்க்குப்பின் கிராமத்திற்குள் நுழைந்த பாதுகாப்பு படையினர்

படப்பிடிப்பின்போது  இமாச்சல பிரதேசத்தில் நிலச்சரிவில் சிக்கிய நடிகை மஞ்சுவாரியரை இரண்டு நாட்கள் கழித்து, கடுமையான போராட்டத்திற்குப் பின்னர் பாதுகாப்பு படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். 

மலையாள இயக்குநர் சனல்குமார் சசிதரன் இயக்கும் ’கய்யாட்டம்’என்ற புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு, இமாச்சல் பிரதேசம் ஸ்பிட்டி என்ற பள்ளத்தாக்கிற்கு அருகில் சத்ரூ என்ற கிராமத்தில் நடைபெற்றது, அதில் சுமார் 30க்கும் மேற்பட்ட கலைஞர்களுடன்   நடிகை மஞ்சுவாரியர் படபிடிப்பில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அந்த பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக அப்பகுதியில் கடுமையான நிலச்சரிவு ஏற்ப்பட்டது.  அதில் மஞ்சு வாரியர் தங்கியிருந்த சத்ரூ கிராமத்தில் இருந்தவர்கள் வெளியேற முடியாமல் சாலைகள் துண்டிக்கப்பட்டதால்  கிராமமக்களுடன் சேர்ந்து படக்குழுவினரும்  பள்ளத்தாக்கில் சிக்கிக்கொண்டனர்.  இதனால் அந்த பகுதிக்கு மீட்புப்படையினர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. 

இதனால் கிராம மக்களுடன் சேர்ந்து நிலச்சரிவில்  சிக்கிய படக்குழுவினருக்கு உணவுபொருட்கள் விநியோகம் தடைபட்டது, இதனையடுத்து மஞ்சுவாரியர் தனது சகோதர் மது வாரியருக்கு அவரச குறுஞ்செய்தி அனுப்பினார், செய்தியை அறிந்து பதறிய அவர், கேரள வெளியுறவுத்துறை அமைச்சர் முரளிதரனிடம் தன் தங்கைக்கு உதவுமாறு கோரினார், இதனால் இமாச்சல் முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூரிடம் பேசி உதவி செய்வதாக அவர் உறுதியளித்தார். அதற்கிடையில் கடுமையான போராட்டத்திற்க்குப்பின் கிராமத்திற்குள் நுழைந்த பாதுகாப்பு படையினர் மஞ்சுவாரியர் உள்ளிட்ட படக்குழுவினரை பத்திரமாக மீட்டனர். 

கிரம மக்களையும் பத்திரமான மீட்டு பாதுகாப்பான இடத்தில் அவர்கள் தங்கவைக்கப்பட்டனர். அவர்களுக்கு தேவையான உதவிகளிலும் துணை ராணுவம் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நிலச்சரிவில் சிக்கி உயிர் போராட்டத்திற்குப் பின்னர் மீட்கப்பட்டுள்ள படக்குழுவினர் தப்பித்தோம் பிழைத்தோம் என அந்த இடத்தை காலிசெய்து வேறு இடத்திற்கு  முகாமிட்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!