Beast director Nelson : உதவி செஞ்சவருக்கே ஆப்பு வச்ச பீஸ்ட் இயக்குனர்... என்ன இப்படி பண்ணிட்டாரு?

Ganesh A   | Asianet News
Published : Jan 17, 2022, 08:04 AM IST
Beast director Nelson : உதவி செஞ்சவருக்கே ஆப்பு வச்ச பீஸ்ட் இயக்குனர்... என்ன இப்படி பண்ணிட்டாரு?

சுருக்கம்

பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு செலவு இயக்குனர் நெல்சன் கூறியதை விட அதிகமாக சென்று விட்டதாம். இதனால் சன் பிக்சர்ஸ் தரப்பு நெல்சன் மீது கடும் அதிருப்தியில் உள்ளதாம். 

லிட்டில் சூப்பர்ஸ்டார் சிம்புவின் வேட்டை மன்னன் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நெல்சன். அப்படம் சில பிரச்சனைகளால் ரிலீசாகாமல் முடங்கிப்போனது. இதையடுத்து லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவை வைத்து அவர் இயக்கிய கோலமாவு கோகிலா திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றது.

பின்னர் சிவகார்த்திகேயனுடன் இணைந்த நெல்சன். அவர் நடித்த டாக்டர் படத்தை இயக்கினார். இப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன் திரையரங்கில் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றியை ருசித்தது. மேலும் இப்படம் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து பாக்ஸ் ஆபீஸிலும் பட்டையை கிளப்பியது.

தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் நெல்சன் படத்தை இயக்கி உள்ளார் நெல்சன். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு செலவு இயக்குனர் நெல்சன் கூறியதை விட அதிகமாக சென்று விட்டதாம். இதனால் சன் பிக்சர்ஸ் தரப்பு நெல்சன் மீது கடும் அதிருப்தியில் உள்ளதாம். ஆனால், நெல்சன் அந்த பழியை தூக்கி படத்தின் புரொடக்‌ஷன் மேனேஜர் உதயகுமார் மீது போட்டுவிட்டாராம். சில நேரங்களில் ஷூட்டிங்கிற்கு இயக்குனர் நெல்சன் லேட்டாக வந்தாலும், அதனை மேலிடம் வரை தெரியாமல் காப்பாற்றி வந்தாராம் உதயகுமார். தற்போது தனக்கு ஒரு பிரச்சனை வந்ததும், உதவி செய்தவருக்கே நெல்சன் ஆப்பு வைத்து விட்டதாக கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

நிவேதா பெத்துராஜ் - ரஜித் திருமணம் நிறுத்தம்? இன்ஸ்டாவில் போட்டோஸை நீக்கியதால் டவுட்டோ டவுட்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் ஹைலைட்ஸ்: ராஜீ முதல் தங்கமயில் வரை இன்றைய அப்டேட்ஸ்!