நடிகை பாவனாவின் திருமண தேதி வெளியானது!

 
Published : Dec 20, 2017, 08:12 PM ISTUpdated : Sep 19, 2018, 01:42 AM IST
நடிகை பாவனாவின் திருமண தேதி வெளியானது!

சுருக்கம்

bavana marriage date announced

நடிகை பாவனா, அந்த துயர சம்பவத்தில் இருந்து மீண்டு தற்போது தன்னுடைய முழு கவனத்தையும் நடிப்பில் செலுத்தி வருகிறார். இவர் தற்போது தமிழ்ப் படங்களில் நடிக்கவில்லை என்றாலும். இவருக்கு கோலிவுட் ரசிகர்கள் பலர் உள்ளனர்.

மலையாளப் படங்களில் நடித்துள்ள இவருடைய திருமண நிச்சயதார்த்தம் சமீபத்தில் கேரளாவில் நடந்தது. இவருடைய நிச்சயத்திற்குப் பின் இவருடைய திருமண தேதி குறித்து தொடர்ந்து பல்வேறு வதந்திகள் சமூக வலைத்தளத்தில்  வெளியாகிக்கொண்டிருந்தன.

இந்நிலையில் நடிகை பாவனாவிற்கும், பிரபல கன்னட தயாரிப்பாளர் நவீனுக்கும் டிசம்பர் மாதம் 22ஆம் தேதி கேரள மாநிலம் திருச்சூரில் மிகவும் எளிமையான முறையில் திருமணம் நடைபெற உள்ளதாகக் கூறப்படுகிறது. 

இந்தத் திருமணத்துக்கு, பாவனா மற்றும் நவீனுக்கு நெருங்கிய உறவினர்கள், நண்பர்களுக்கு மட்டும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. மேலும் தற்போது திருமணம் செய்துகொள்ளும் நட்சத்திர ஜோடிகள் போல் ஆடம்பரமாக திருமணம் செய்துகொள்ள இருவரும் விரும்பாமல் எளிமையான உடையில் குறிப்பிட்ட நகைகள் மட்டுமே அணிந்து திருமணம் செய்துகொள்ள பாவனா முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் திருமணத்திற்குப் பின்  நல்ல கதாபாத்திரம் கிடைத்தால் நடிப்பை தொடர்வேன் எனக் கூறியுள்ள பாவனா... திருமணத்திற்குப் பின்னரும் நடிப்பதற்கு தன்னுடைய கணவர் வீட்டில் எந்த எதிர்ப்பும் இல்லை என கூறியுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ரசிகர்களின் மனதை திரும்பவும் கொள்ளை கொண்ட அந்த ஒரு சீன் எது தெரியுமா? கார்த்திகை தீபம் சீரியல்!
கார் விபத்து: நடுரோட்டில் பஞ்சாயத்தை முடித்து வைத்த சிவகார்த்திகேயன்! ரியல் லைஃப் 'அமரன்' என பாராட்டும் ரசிகர்கள்!