பிரசாத் ஸ்டுடியோ விவகாரம்...உயிர்த்தோழனுக்காக கொலைவெறியுடன் களம் இறங்கிய பாரதிராஜா...

By Muthurama LingamFirst Published Oct 21, 2019, 1:09 PM IST
Highlights

பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சுமார் 20 வருடங்களுக்கும் மேலாக, அதை கோயிலாகவே மாற்றிப் பணியாற்றி வந்த இளையராஜா வெளியேறினார். அதனால் அவர் இசையமைத்து வரும் 5க்கும் மேற்பட்ட படங்களின் பணிகள் முடங்கின. இச்செய்தி அவரது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக அமைந்த நிலையில் திரையுலகினரும் தங்களது வருத்தங்களை பதிவு செய்து வந்தனர்.
 
சுமார் ஒரு மாதத்துக்கும் மேலாக இசைஞானி இளையராஜா பிரசாத் ஸ்டுடியோ பக்கம் கால் எடுத்துவைக்க முடியாமல் முடங்கிப்போயிருக்கும் நிலையில், அந்த துயரத்துக்கு ஒரு முடிவு கட்ட, அவரது நீண்ட கால நண்பர் பாரதிராஜா பஞ்சாயத்தில் இறங்கியிருப்பதாக கோடம்பாக்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சுமார் 20 வருடங்களுக்கும் மேலாக, அதை கோயிலாகவே மாற்றிப் பணியாற்றி வந்த இளையராஜா வெளியேறினார். அதனால் அவர் இசையமைத்து வரும் 5க்கும் மேற்பட்ட படங்களின் பணிகள் முடங்கின. இச்செய்தி அவரது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக அமைந்த நிலையில் திரையுலகினரும் தங்களது வருத்தங்களை பதிவு செய்து வந்தனர்.

ஆனால் பிரச்சினையின் உண்மையான விபரங்கள் தெரியாததால் ராஜாவுக்கும் ,பிரசாத் நிர்வாகத்துக்கும் இடையிலான பஞ்சாயத்தைக் கையிலெடுக்க ஒருவரும் முன்வரவில்லை. இந்நிலையில் ராஜா பிரசாத் ஸ்டுடியோவுக்கு வரமுடியாமல் தடுக்கப்பட்டுள்ளார். அவரது ரெகார்டிங் ஸ்டுடியோவை பிரசாத் நிர்வாகம் தான் வலுக்கட்டாயமாக மூடிவைத்துள்ளது என்பதை மிகத் தாமதமாகத் தெரிந்துகொண்ட பாரதிராஜா, ராஜாவுக்கு போன் செய்து ‘உன்னை மீண்டும் பிரசாத் ஸ்டுடியோவில் அமர வைப்பதுதான் என் அடுத்த வேலை’என்று கூறி சம்பந்தப்பட்ட நிர்வாகிகளை  மிகவும் கோபமான குரலில் ’என் இனிய தெலுங்கு மக்களே’ என்று பஞ்சாயத்துக்கு அழைத்திருக்கிறாராம். நிர்வாகத் தரப்பும் அறிக்கை மாதிரி எதுவும் குடுத்து எங்கள ராஜாவோட எதிரி மாதிரி ஆக்கிடாதீங்க. நீங்க என்ன சொன்னாலும் நாங்க கேக்குறோம்’என்று பணிந்து வந்திருக்கிறதாம்.

உலகம் முழுக்க கோடிக்கணக்கான ரசிகர்கள் கொண்டிருக்கும் ராஜாவின் ஆயிரம் ரசிகர்கள் அவருக்காக நீதி கேட்டு வந்தாக் கூட தாங்க மாட்டீங்களே பாஸ்?

click me!