41 வருடத்தை நினைத்து பார்க்கவேண்டும்... இளையராஜாவிற்காக போராட்டத்தில் குதித்த பாரதிராஜா..! தள்ளு முள்ளால் பரபரப்பு..!

By manimegalai aFirst Published Nov 28, 2019, 4:33 PM IST
Highlights

கடந்த 41 வருடங்களாக இளையராஜாவின், ரெகார்டிங் தியேட்டர் இயங்கி வந்த, பிரசாத் ஸ்டுடியோவில் இருந்து, அவரை காலி செய்ய  சொன்னது தவறு என்றும், மீண்டும் இளையராஜா அங்கு அவருடைய இசை பணிகளை செய்ய அனுமதிக்க வேண்டும் என கூறி, ஓரிரு தினத்திற்கு முன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார் பாரதிராஜா.

இந்த அறிக்கையில், பிரசாத் ஸ்டுடியோ தரப்பினரிடம் பேச்சு வார்த்தை நடத்த உள்ளதாகவும், அவர்கள் ஏற்கவில்லை என்றால், போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்திருந்தார். மேலும் திரையுலகை சேர்ந்த அனைவரும் இதில் கலந்து கொள்ளவேண்டும் என தெரிவித்திருந்தார்.

அதன் படி, இன்று... திரையுலகை சேர்த்தவர்களுடன் பாரதிராஜா மற்றும் சீமான் ஆகிய இருவரும் பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகத்தினரிடம் பேச்சு வார்த்தை நடத்துவதற்காக அங்கு கூடினர். அவர்களை உள்ளே அனுமதிக்க, மறுத்ததால் அங்கு தள்ளு முள்ளு ஏற்பட்டு பரபரப்பாக மாறியது.

இதில்... " பிரசாத் ஸ்டூடியோவில் குறிப்பிட்ட இடத்தை இளையராஜா 41 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தி வருகிறார் என்பதை அவர்கள் நினைத்து பார்க்க வேண்டும். அவர் இருக்கும் வரை பிரசாத் ஸ்டுடியோவில் அவருடைய இசை பணிகளை தொடர அனுமதி தரவேண்டும் என கோரிக்கையை முன்வைத்து போராடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!