
தென்னிந்திய திரையுலகை அனைவரும் திரும்பிப் பார்க்கும் அளவிற்கு சிறந்த படங்களை இயக்குபவர் இயக்குனர் ஷங்கர். இவருடன் துணை இயக்குனர்களாகப் பணியாற்றிய பலர் இன்று சிறந்த இயக்குனர்களாக உள்ளனர்.
இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் நடிக்க பல நடிகர்கள் காத்திருக்கின்றனர் என்பது அனைவரும் அறிந்ததுதான். மேலும் ஷங்கர் இயக்குனர் என்பதையும் தாண்டி சிறந்த கதைகளைக் கேட்டறிந்து படங்களை தயாரிப்பவர்.
அந்த வகையில் ஷங்கர் தயாரிப்பில் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளிவந்த படம்தான் கல்லூரி. தமன்னா கதாநாயகியாக நடித்த இந்தப் படம் நட்பைப் பற்றியும் உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தியும் எடுக்கப்பட்டு மிகப் பெரிய வெற்றி பெற்றது.
இந்நிலையில் சமீபத்தில் வார இதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள பிக் பாஸ் புகழ் பரணி, நான் இன்று இந்த இடத்தில் இருக்கின்றேன் என்றால் அதற்கு காரணம் ஷங்கர் சார், பாலாஜி அண்ணே, சமுத்திரக்கனி அண்ணே தான்.
எனக்கு கல்லூரி தான் முதல் படம். உதவி இயக்குனர் ஆக வேண்டும் என்று வந்த என்னை , நடிகனாக மாற்றி அழகு பார்த்தனர். இந்தப் படம் வெளிவந்து 10 வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது, மீண்டும் இந்தக் கூட்டணியை வைத்து ஷங்கர் சார் படம் தயாரிக்க வேண்டும் என அன்பு வேண்டுகோள் விடுத்துள்ளார் பரணி.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.