
பிக்பாஸ் சீசன் 2-ல், போட்டியாளர்களாக களமிறங்கி உள்ள உண்மையான கணவன் மனைவி ஜோடிகள் பாலாஜி மற்றும் நித்யா என்பது அனைவரும் அறிந்தது தான்.
இந்த நிகழ்ச்சியின் மூலம் தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடை நீக்கி எப்படியாவது, தன்னுடைய மனைவி மனதில் உள்ள கோபத்தை தனித்து, ஜோடியாகத்தான் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்கிற நோக்கத்தில் வந்திருக்கிறார் பாலாஜி. ஆனால் நித்தியாவே தன்னுடைய மகளை நன்றாக பார்த்துக்கொள்ள பணம் வேண்டும் அதனால் தான் இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டுள்ளதாக கூறியுள்ளார்.
8 மாதத்திற்கு பிறகு பிக்பாஸ் வீட்டில் தான் பாலாஜி மற்றும் நித்யா பார்த்துக்கொள்கிறார்கள். எனினும் அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் இருந்து வருகின்றனர் இருவரும்.
பாலாஜி, நித்யாவை நெருங்கி வந்து சமாதனம் செய்ய முயன்றாலும் அதனை பெரிதாக பொருட்படுத்தாமல் நடந்து கொள்கிறார் அவருடைய மனைவி.
மேலும் நித்யாவிடம் பேச ஏதாவது நேரம் கிடைத்தால் அதனையும் பயன்படுத்திக்கொள்கிறார் பாலாஜி. ஆனால் நித்யாவிடம் இருந்து வெளிப்படுவதோ கோபம் மட்டும் தான்.
இந்நிலையில், நேற்று நித்யா டீ போட்டு கொண்டிருந்தார். அப்போது நித்தியாவின் அருகே சென்ற பாலாஜி... நீ டீ போடுவதே அழகு தான் என கூறுகிறார். இதற்கு நித்யா காமெடி சரியில்லை என்று மொக்கை கொடுக்கிறார். பின் பாலாஜி நித்யாவின் கன்னத்தை ஆசையாக தட்ட நித்தியாவிற்கு கோபம் வந்து முகத்தை திருப்பிக்கொண்டார். பின் பாலாஜியை நித்யா முறைக்க ஒன்றும் தெரியாத பிள்ளை போல் அந்த இடத்தில் இருந்து நழுவினார் பாலாஜி.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.