"நான் நடிக்கலைங்க" கண்ணீர் விட்டு கதறும் தாமரை..மெஜாரிட்டி இழந்த பாலா..இன்றைய அல்டிமேட்..

Kanmani P   | Asianet News
Published : Feb 05, 2022, 02:13 PM IST
"நான் நடிக்கலைங்க" கண்ணீர் விட்டு கதறும் தாமரை..மெஜாரிட்டி இழந்த பாலா..இன்றைய அல்டிமேட்..

சுருக்கம்

இன்றைய பிக்பாஸ் அல்டிமேட்டில் இது உலகமாக நடிப்புடா என தாமரைக்கு பட்டம் கொடுக்கும் ஹவுஸ் மேட்டால்..மனம் உடைந்து அழுகிறார்..

தமிழில் தற்போது முதன்முறையாக ஓடிடி தளத்துக்காக மட்டும் பிரத்யேகமாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஒன்று நடத்தப்படுகிறது. ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்துக்காக நடத்தப்படும் இந்நிகழ்ச்சியை கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்குகிறார். பிக்பாஸ் அல்டிமேட் என பெயரிடப்பட்டு உள்ள, இந்நிகழ்ச்சி 24 மணிநேரமும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி கடந்த ஞாயிறன்று பிரம்மாண்டமாக தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் சினேகன், சுஜா வருணி, ஜூலி, தாடி பாலாஜி, ஷாரிக், அபிராமி, வனிதா, அனிதா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ், சுருதி, நிரூப், தாமரைச் செல்வி, அபிநய் என மொத்தம் 14 போட்டியாளர்கள் களமிறங்கி உள்ளனர். 

பிக்பாஸ் நிகழ்ச்சியின் விதிப்படி ஒவ்வொரு வார இறுதியிலும் மக்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில் குறைவான வாக்குகளை பெறும் போட்டியாளர் வெளியேற்றப்படுவது வழக்கம். தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் அதே நடைமுறை பின்பற்றப்படுகிறது. இந்த வார எவிக்‌ஷனுக்காக நிரூப், சினேகன், அனிதா, சுருதி, ஜூலி, வனிதா, சுரேஷ், அபிநய் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டனர். 

இதில் தற்போது வனிதா, சுரேஷ் சக்ரவர்த்தி, அபிநய் ஆகியோர் டேஞ்சர் ஜோனில் உள்ளனர். இவர்கள் மூவரில் சுரேஷ் சக்ரவர்த்திக்கு தான் குறைந்த அளவிலான வாக்குகள் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதனால் இந்த வாரம் அவர் வெளியேற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ஆரம்பம் முதலே பிக் பாஸ் வீட்டில் தாமரை டார்கெட் செய்யப்படுவதாகவே தெரிகிறது.. வீட்டில் மாங்கு மாங்கென்று வேலை செய்யும் தாமரையை ஏன் தலைவராக தேர்ந்தெடுக்கவில்லை என பாலா முன்பு கேட்டிருந்தார்..இதை தொடர்ந்து இன்றைய எபிசோடில் அதிக ஒட்டு வாங்கிய நபர் தலைவியார் என தேர்ந்தெடுக்கும் டாஸ்கில் தாமரைக்கு இது உலகமகா நடிப்புடா என பட்டம் கொடுக்கப்படுகிறது.. ஏற்கனவே பொருமிக்கொண்டிருக்கும் தாமரை இதனால் உடைந்து அழ துவங்குகிறார்..

 

 

அதோடு இறுதியாக சுரேஷ், பாலா தலைவராக தேர்நதெடுக்கப்பட அதில் சுரேஸுக்கே அதிக நபர்கள் சப்போர்ட் செய்கிறார்கள்.. பாலாவுக்கு வெறும் மூன்று நபர்கள் மட்டுமே இருக்க இவரை தூக்க அவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்..

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அங்கம்மாள் திரைப்படம் சூப்பரா? சுமாரா? விமர்சனம் இதோ
அடிபொலியாக இருந்ததா குற்றம் புரிந்தவன் வெப் சீரிஸ்...? முழு விமர்சனம் இதோ