கில்மா ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய வர்மா..!

By manimegalai aFirst Published Oct 8, 2018, 2:03 PM IST
Highlights

சர்ச்சைக்கு பஞ்சமில்லாத இயக்குனர் 'ராம் கோபால் வர்மா' கோலிவுட் பிரபலங்கள் அஜித், முதல் பாலிவுட் பிரபலம் வரை அவ்வபோது போர் அடிக்கும் போதெல்லாம்.

சர்ச்சைக்கு பஞ்சமில்லாத இயக்குனர் 'ராம் கோபால் வர்மா' கோலிவுட் பிரபலங்கள் அஜித், முதல் பாலிவுட் பிரபலம் வரை அவ்வபோது போர் அடிக்கும் போதெல்லாம்... ஏதேனும் சர்ச்சையான கருத்துக்களை வெள்ளியிட்டு அவர்களுடைய ரசிகர்களின் கோபத்திற்கு ஆளாவார்.

இந்நிலையில் இவர் புதுமுகங்கள் நடிக்கும் ‘பைரவா கீதா ’ என்ற படத்தை தமிழ் உள்ளிட்ட நான்கு மொழிகளில் தயாரித்திருக்கிறார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னட ஆகிய மொழிகளில் உருவாகி இருக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குநர் சித்தார்த் தாதூலு என்பவர் இயக்கியிருக்கிறார்.

இதில் தனஞ்ஜெயா என்ற நாயகனும், ஈரா என்ற நாயகியும் புதுமுக நடிகர் மற்றும் நடிகையாக அறிமுகமாகிறார்கள். அதிக பொருட்செலவில் தயாரித்துள்ளார் இயக்குனர் ராம் கோபால் வர்மா.

சாதீய  பிரச்சினைகளின் பின்னணியில் ஆக்சன் கலந்த அழுத்தமான காதல் கதையாக உருவாகி இருக்கிறது ‘பைரவா கீதா ’. மேலும் நான்கு மொழிகளிலும் ஒரே நேரத்தில் இந்த திரைப்படம் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இப்படத்தின் பாடல்களையும்,ஃபர்ஸ்ட் லுக்கை தயாரிப்பாளர்கள் அபிஷேக் நாமா மற்றும் பாஸ்கர் ராஷி ஆகியோர் தங்களின் அபிசேக் பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் வெளியிட்டுள்ளனர். ஸிராஸ்ரீ எழுதிய பாடல்களுக்கு ரவிசங்கர் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் டீஸர், டிரைலர் மற்றும் பாடல்கள் இணையத்தில் வெளியாக பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

ராம் கோபால் வர்மா தயாரிப்பில், புதுமுகங்கள் தனஞ்ஜெயா, ஈரா ஆகியோர் நடித்திருக்கும் ‘பைரவா கீதா ’அக்டோபர் 26 ஆம் தேதியன்று வெளியாகும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.

click me!