லீக் ஆன "பாகுபலி 2 "... உடைக்க பட்ட சஸ்பென்ஸ்...

 
Published : Apr 27, 2017, 06:52 PM ISTUpdated : Sep 19, 2018, 03:12 AM IST
லீக் ஆன "பாகுபலி 2 "... உடைக்க பட்ட சஸ்பென்ஸ்...

சுருக்கம்

bahubali 2 movie suspence leeked

இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ராணா நடிப்பில் உருவாகியுள்ள 'பாகுபலி 2'  திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. 

இந்த படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் வெளிவர கூடாது என கடும் பாதுகாப்புடன் படப்பிடிப்பை நடத்தினர் படக்குழுவினர்.

இந்த நிலையில் இவர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மீறி இந்த படத்தின் இரண்டு நிமிட காட்சிகள் சமூகவலைத்தளங்கள் லீக் ஆகியுள்ளது. இதனால் படக்குழுவினர் பெரும் அதிர்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த இரண்டு நிமிட காட்சியில் பிரபாஸ், ராணா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணா , அனுஷ்கா, நாசர், ஆகியோர் தோன்றும் காட்சி வெளியாகியுள்ளதாகவும், படத்தில் உள்ள ஒரு ரகசியத்தை இந்த காட்சி வெளிப்படுத்துவது போல் உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

மிகவும் பாதுகாப்பாக ரூ. 1000 கோடி மதிப்பு வியாபாரமுள்ள  ஒரு திரைப்படத்தின் காட்சிகள் ரிலீசுக்கு முன்பே வெளியாகியுள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த காட்சிகள் பிரிவியூ திரையரங்கில் அல்லது போஸ்ட் புரொடக்சன்     பணிகள் நடைபெறும்போது செல்போனில் பதிவு செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நானும், ரேவதியும் 6 மாசம் சேர்ந்து இருக்கணும்: கோர்ட் உத்தரவு! சாமுண்டீஸ்வரி, சந்திரகலாவுக்கு ஆப்பு வச்ச கார்த்திக்!
ஜெயிலர் 2-ல் நான் கெஸ்ட் ரோல் இல்லை: சிவண்ணாவின் மர்மப் பேச்சு! முத்துவேல் பாண்டியனுடன் மீண்டும் நரசிம்மா!