இசை வெளியீட்டு விழாவிலும் பிரமாண்டம்... கெத்து காட்டும் பாகுபலி  டீம்...

 
Published : Mar 27, 2017, 05:13 PM ISTUpdated : Sep 19, 2018, 03:04 AM IST
இசை வெளியீட்டு விழாவிலும் பிரமாண்டம்... கெத்து காட்டும் பாகுபலி  டீம்...

சுருக்கம்

baahubali 2 audio launch

இந்திய திரையுலகமே ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் பிரமாண்ட படம் பாகுபலி-2,இந்த படத்தின்  இசை வௌியீட்டு விழா, ஐதராபாத்தில் இன்று மிக பிரமாண்டமாக நடைபெற்றது.

பாகுபலி முதல் பாகத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து,  அதன் இரண்டாம் பாகம் இன்னும் பிரமாண்டமாய் உருவாகி உள்ளது. இந்திய சினிமாவையே வியக்க வைத்த "பாகுபலி 2 "  படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியிடப்பட்டு உலகளவில் டிரெண்ட் ஆனது குறிப்பிடத்தக்கது. 

மேலும் இப்படம் உலகின் டாப்-10 டிரைலர்களிலும் இடம்பெற்றுள்ளது.இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ஸ்டுடியோவில் நடந்தது. 

இதில் இந்தியத் திரையுலகில் பல புதிய தொழில்நுட்பங்களை பாகுபலி குழுவினர் அறிமுகப்படுத்தி வருகிறார்கள். அந்தவகையில், இப்படத்தின் இசை வெளியீடு ஐதராபாத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. 

இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சியை முதல் முறையாக 360 டிகிரி கோணத்தில், 4 கே-வில் ஔிப்பரப்பினார்கள். யூ-டியூப்பில் நேரடியாக ஔிப்பரப்பட்ட இந்த நிகழ்ச்சி 360 டிகிரி கோணத்தில் பார்க்க முடிந்தது.

இந்த இசை வௌியீட்டு நிகழ்ச்சியில் பிரபல ஹிந்தி பட இயக்குநர் கரண் ஜோகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் பல தெலுங்கு திரையுலகை சேர்ந்த முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

'ரவுடி ஜனார்தனா' கிளிம்ப்ஸ்: குறி தப்பாது! மிரட்டலான கேங்ஸ்டர் அவதாரத்தில் விஜய் தேவரகொண்டா!
செந்தில் பேச்சை கேட்காத பாண்டியன்: இருந்தாலும் இம்புட்டு வைராக்கியம் ஆகாது: குடும்பத்தில் வெடிக்கும் அடுத்த சண்டை!