ரஜினிகாந்த் பற்றி பேசிய அரசியல் தலைவர்கள்...பதிலடி கொடுத்த ராகவா லாரன்ஸ்...

 
Published : Mar 27, 2017, 03:23 PM ISTUpdated : Sep 19, 2018, 03:04 AM IST
ரஜினிகாந்த் பற்றி பேசிய அரசியல் தலைவர்கள்...பதிலடி கொடுத்த ராகவா லாரன்ஸ்...

சுருக்கம்

ragava lawrence about rajinikanth

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  சமீபத்தில் தனது இலங்கை பயணத்தை ரத்து செய்து அதுகுறித்து ஒரு விளக்க அறிக்கையையும் வெளியிட்டுள்ளார். 

ரஜினியின் இலங்கை பயண ரத்துக்கு சுப்பிரமணியன் சுவாமி உள்பட ஒருசில அரசியல்வாதிகளும், சமூக வலைத்தள பயனாளிகளும் விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் ரஜினியின் தீவிர ரசிகர்கரும், நடிகர், இயக்குனருமான ராகவா லாரஸ்ன் இதுகுறித்து ஆவேச அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது...

கருத்து சுதந்திரம் என்ற பெயரில் தலைவர் ரஜினிகாந்த் குறித்த தங்கள் பார்வையை, ஆங்காங்கே பலரும் தெரிவித்து வருவதை காண முடிகிறது.

நான் அவரது மிகப்பெரிய ரசிகன் மற்றும் தொண்டன் என்ற முறையில், ஏன் அவர் ஒரு என்னுடைய தன்னிகரில்லாத தலைவர் இருக்கின்றார் என்று பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்

பத்து பேர் பின்னால் இருந்தாலே கட்சி ஆரம்பித்து, ஆட்சிக்கு ஆசைப்படும் இக்காலத்தில், கோடிக்கணக்கான உயிர் ரசிகர்கள் உடனிருந்தும், அரசியல் நாற்காலிக்கு ஆசைப்படாதவர் என் தலைவர்

இரண்டாவதாக, இத்தனை பெரிய ரசிகர் படை வைத்திருக்கும் என் தலைவர், மிக எளிதாக, ஆறு மாதத்திற்கு ஒரு படம் நடித்து வெளியிட்டு, மிகப்பெரும் பணம் சேர்க்கலாம். ஆனால், இரண்டு மூன்று வருடத்திற்கு ஒர் படம் மட்டுமே நடிக்க ஒப்புக்கொள்வது, அவர் பணத்தின் மேல் ஆசை இல்லாதவர் என்பதை நிரூபிக்கிறது.,

பிரதமர் அவர்களது நம் மாநில வருகையின்போது அவர் சந்திக்க விரும்பிய, சந்தித்த ஒரே தலைவர் அனேகமாக சூப்பர் ஸ்டார் மட்டுமாகத்தான் இருக்கும். அவரது நன்மதிப்பும், போலித்தனமின்மையும் இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்

இந்தியாவிலேயே, நட்சத்திர அந்தஸ்தின் உச்சத்தில் இருந்துவரும் போதும், நாட்டிலேயே மிகப்பிரபலமான நடிகராக இருக்கும்போதும், எந்தவிதமான ஆசையும், ஆணவமும் இல்லாமல் , ஆன்மீக வழியை தேர்ந்தெடுத்து பயணம் செய்பவர் அவர்

இவை, தலைவரை மதித்து வணங்கும் என் ஒருவனின் தனிப்பட்ட கருத்து மட்டுமல்ல, கோடிக்கணக்கான மக்கள் அவரை நேசிப்பதற்கு காரணமும் இதுதான்

சிலர், தலைவரை குறித்து தவறாக பேச நினைக்கலாம். ஆனால், அவரை நன்கு அறிந்தவர்கள், அவரை மதித்து வணங்குபவர்கள் அந்த கோடிக்கணக்கான தொண்டர்களில் நானும் ஒருவன் என்பதை பெருமையுடன் தெரிவித்து கொள்கிறேன்.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கோடி கோடியாக சம்பாரிச்சலும் கலைஞனுக்கு கை தட்டால் ரொம்ப முக்கியம் - சித்ரா லட்சுமணன்
யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்... ஆதி குணசேகரனால் ஆபத்தில் சிக்கும் ஜனனி - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி