மிரட்டும்  பாகமதி டிரெய்லர்.... அசத்தும் அனுஷ்கா... 

 
Published : Jan 09, 2018, 02:31 PM ISTUpdated : Sep 19, 2018, 01:48 AM IST
மிரட்டும்  பாகமதி டிரெய்லர்.... அசத்தும் அனுஷ்கா... 

சுருக்கம்

baahamathi trailer in anushka

நடிகர்களில் கமல் எப்படியோ அதுபோல நடிகைகளில் அனுஷ்கா. ஒவ்வொரு படத்திற்கும் உடலை வருத்திக் கதாபாத்திரத்திற்கு ஏற்றாற்போல் தன்னை மாற்றிக் கொண்டு அற்புதமாக நடிப்பார். 



அதன்படி கடந்த 2009ம் ஆண்டு அனுஷ்கா நடிப்பில் வெளியான அருந்ததி திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதில் அருந்ததியாகவே வாழ்ந்திருப்பார் அனுஷ்கா. அதில் பேத்தி அருந்ததியை விட பாட்டி அருந்ததியே அதிக ஸ்கோர் செய்திருப்பார்.


அதற்கு அடுத்தபடியாக பாகுபலி. இந்தப் படத்தில் வீரமான இளவரசி, அன்பான மனைவி, பாசமான அம்மா என அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் அனுஷ்கா.


இந்நிலையில் பாகுபலிக்கு அடுத்தபடியாக அனுஷ்காவின் நடிப்பிற்கு தீனி போடும் விதமாக  அமைந்துள்ள படம் பாகமதி. ஸ்டூடியோ கிரீன் வெளியிடும் இப்படத்தை ஜி.அசோக் இயக்கியுள்ளார்.  இந்தப் படத்தில் அனுஷ்கா, உன்னி முகுந்தன், ஜெயராம், தலைவாசல் விஜய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 

அனுஷ்காவின் பிறந்த நாளன்று பாகமதி படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. பின்னர் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வைரலாகி வருகிறது.  தமிழ் தெலுங்கு மலையாளம் என மூன்று மொழிகளில் வெளியாகும் பாகமதி வருகிற ஜனவரி 26ம் தேதி திரைக்கு வருகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கோடி கோடியாக சம்பாரிச்சலும் கலைஞனுக்கு கை தட்டால் ரொம்ப முக்கியம் - சித்ரா லட்சுமணன்
யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்... ஆதி குணசேகரனால் ஆபத்தில் சிக்கும் ஜனனி - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி