முல்லி வாய்க்காலின் இறுதி நாட்களைக் கண்முன் நிறுத்தும் ‘ஒற்றைப் பனை மரம்’...

Published : Jan 24, 2019, 01:16 PM IST
முல்லி வாய்க்காலின் இறுதி நாட்களைக் கண்முன் நிறுத்தும் ‘ஒற்றைப் பனை மரம்’...

சுருக்கம்

37 சர்வதேச திரைப்பட விழாக்களில் தேர்வாகி சிறந்த நடிகர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த இசை என பல்வேறு பிரிவுகளில் 12  விருதுகளையும்  வாங்கிக் குவித்த ‘ஒற்றைப் பனை மரம்’ படம் விரைவில் திரைக்கு வருகிறது.‘நேற்று இன்று’, ‘இரவும்  பகலும்  வரும்’, ‘போக்கிரி  மன்னன்’  ஆகிய படங்களை வாங்கி வெளியிட் ஆர்.எஸ்.எஸ்.எஸ்.பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான எஸ்.தணிகைவேல் இப்படத்தை வெளியிடுகிறார்.


37 சர்வதேச திரைப்பட விழாக்களில் தேர்வாகி சிறந்த நடிகர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த இசை என பல்வேறு பிரிவுகளில் 12  விருதுகளையும்  வாங்கிக் குவித்த ‘ஒற்றைப் பனை மரம்’ படம் விரைவில் திரைக்கு வருகிறது.‘நேற்று இன்று’, ‘இரவும்  பகலும்  வரும்’, ‘போக்கிரி  மன்னன்’  ஆகிய படங்களை வாங்கி வெளியிட் ஆர்.எஸ்.எஸ்.எஸ்.பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான எஸ்.தணிகைவேல் இப்படத்தை வெளியிடுகிறார்.

இந்தப் படத்தில் ‘புதியவன்’ ராசையா, நவயுகா, அஜாதிகா புதியவன், பெருமாள் காசி, மாணிக்கம் ஜெகன், தனுவன் ஆகியோர் நடித்துள்ளார்கள்.
தேசிய விருது பெற்ற படத் தொகுப்பாளர் சுரேஷ் அர்ஸ் படத் தொகுப்பையும்,  சர்வதேச விருது  பெற்ற  இலங்கை  ஒளிப்பதிவாளர்  மகிந்த  அபேசிங்க  ஒளிப்பதிவையும் மேற்கொண்டுள்ளனர்.

உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் அஷ்வமித்ரா இசை அமைத்திருக்கிறார். தமிழ் பாரம்பரிய வாத்தியங்களை மட்டுமே வைத்து இசையமைத்திருப்பது படத்திற்கு ஒரு உயிரோட்டமாக அமைந்திருக்கிறது.சிறந்த  இயக்குநர்  விருது  பெற்ற  ‘மண்’  படத்தின்  இயக்குநரான  புதியவன்  ராசையா இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.

முள்ளிவாய்க்கால் போரின் இறுதி நாட்களில்  ஆரம்பிக்கும்  இப்படம்,  சம கால  சூழலில்  முன்னாள்  போராளிகளும், மக்களும்  முகம்  கொடுக்கும்  சொல்லத்  துணியாத  கருவை தெள்ளத் தெளிவாக உருவாக்கி இருக்கிறார்கள். யதார்த்த நடிப்பு, இயல்பான காட்சியமைப்பு, இதயத்தை கனத்துப் போக வைக்கும்  திருப்பங்கள்  என கதைக்குள் உங்களை அழைத்துச் சென்று, ஈழத்தில் கிளிநொச்சியிலுள்ள  கிராமத்தில்  வாழவைத்து,  வதைத்துவிடும்அளவிற்கு இப்படத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.

இப்படத்தை தயாரித்தது குறித்து எஸ்.தணிகைவேல் கூறும்போது, “இந்த ஒற்றைப்  பனை மரம்’  திரைப்படத்தை  தயாரித்ததில்  நான் மிகவும்  மகிழ்ச்சியடைகிறேன். ரசிகர்களுக்கு இத்திரைப்படம் ஒரு புதுவிதமான  அனுபவத்தை  கண்டிப்பாக  கொடுக்கும்…” என்றார். இத்திரைப்படம் 37 சர்வதேச திரைப்பட விழாக்களில் தேர்வாகி சிறந்த நடிகர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த இசை என பல்வேறு பிரிவுகளில் 12  விருதுகளையும்  வாங்கிக் குவித்திருக்கிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மாற்றப்படும் பராசக்தி ரிலீஸ் தேதி... ஜனநாயகனை காலி பண்ண என்னென்ன பண்றாங்க பாருங்க..!
அய்யய்யோ மீனா கண்டுபிடிச்சிட்டாளே... சீட்டிங் பண்ணி சிக்கிய ரோகிணி - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்