
இயக்குநர் பாலா இயக்கத்தில் விஷால், ஆர்யா நடிப்பில் ‘அவன் இவன்’ 2011ம் ஆண்டு வெளியானது. இப்படத்தில் நெல்லை மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சொரிமுத்து அய்யனார் கோவில் பற்றியும், சிங்கம்பட்டி ஜமீன்தார் பற்றியும் அவதூறாக சித்தரிக்கப்பட்டதாக சிங்கம்பட்டி ஜமீனைச் சேர்ந்த சங்கராத்மஜன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு அம்பை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கில் ஏற்கனவே நடிகர் ஆர்யா மற்றும் இயக்குனர் பாலா ஆஜராகி இருந்தனர்.
கடந்த மார்ச் மாதம் நடிகர் ஆர்யா தரப்பில் படத்தில் இடம்பெற்ற காட்சிகளுக்கு வருத்தம் தெரிவித்ததால் அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். ஆனால் இயக்குனர் பாலா ஆஜராகியும் வழக்கு விசாரணை தொடர்ந்து அம்பை கோர்ட்டில் நடைபெற்று வந்தது.
கடந்த 11 ஆண்டுகளாக வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இன்று வழக்கில் இருந்து இயக்குநர் பாலாவை விடுவிப்பதாக அம்பை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். பாலாவின் வலுவான வாதங்களை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதாகவும், மனுதாரர் குற்றத்தை முறையாக நிரூபணம் செய்யாததாலும் பாலாவை வழக்கில் இருந்து விடுவித்துள்ளதாக அவர் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.