
விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. ஆனால், என்ன ரேட்டிங்கில் தான் கொஞ்சம் பஞ்சாயத்து. வெளியில் சென்றவர்கள் வீட்டிற்குள் வருவதும், வீட்டிற்குள் இருப்பவர்கள் வெளியில் செல்வது, வைல்டு கார்டு எண்ட்ரி என்று சிலர் உள்ளே வருவதும் பிக் பாஸ் வீட்டிற்கு என்ன புதுசா? சரி இந்த வாரம் என்ன நடந்தது என்று சின்ன தொகுப்பாக பார்க்கலாம்.
இதில் கடந்த சனிக்கிழமை இறுதியில் மொட்ட கடுதாசி டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் பிக் பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் மொட்டை கடுதாசி டாஸ்க்கில் பங்கேற்றனர். பிக்பாஸ் பார்க்கும் அனைவருக்கும் பாரு, கம்ருதீன் பற்றி தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்லை. இவர்கள் செய்யும் லூட்டிக்கு அளவே இல்ல. பாருவின் அடாவடி பேச்சும் கம்ருதீனின் பொய் முகமும் பார்ப்பவர்களுக்கு எரிச்சல் ஏற்படுத்தும் வகையில் இருக்கும். பாரு கம்ருதீனுக்கு எழுதிய மொட்ட கடுதாசியில் காதலை வெளிப்படுத்தும் வகையில் இருக்கும். நம் காதலை அரோரா சேர்த்து வைப்பார் என்று எழுதிருப்பார். அப்போது அரோரா நான் ஏன் சேர்த்து வைக்க வேண்டும் என்று கேட்டு பாருவை முகம் சுளிக்க வைக்கும்படி பேசினார்.
விஜய் சேதுபதி ஹவுஸ்மேட்ஸ் அனைவருரிடம் ஒரு டாஸ்க் ஒன்றை கொடுப்பார். அதில் யாருடன் தொடர்பை நீட்டிக்க விரும்புகிறீர்கள், யாருடன் தொடர்பை துண்டிக்க விரும்புகிறீகள் என்று கேட்டிருப்பார். மேலும், அதற்கு தொடர்வதற்கு பச்சை நிற batch, துண்டிப்பதற்கு சிவப்பு நிற batchம் கொடுப்பார். அந்த டாஸ்கில் பாரு நான் அரோரா உடன் தொடர வேண்டும். என் தோழி போல் நட்பு வைக்க வேண்டும் என சொல்வார். துண்டிப்பது என்றால் FJ என்று சொல்வார். அடுத்து அரோரா முதலில் உறவை துண்டிப்பதற்கு பாருவை சொல்வார். எனக்கு பாரு கம்ருதீனுக்கு இருக்கும் உறவு பிடிக்கவில்லை. அதனால் என்னை மரியாதையில்லாமல் பேசுகிறார் என்று சொல்வார்.
கம்ருதீன் batch எடுத்து சற்று யோசித்து கொண்டு இருப்பார். இதனால் விஜய் சேதுபதி tension ஆகி break என்று கூறி விட்டு செல்வார். அட்டகத்தி படத்தில் வரும் தினேஷ் போல் நீட்டிப்பதற்கு யாருக்கு குடுக்கலாம் பாருவா அரோராவா என்று யோசிப்பார். அதனை பாருவிடம் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார். விஜய் சேதுபதி சொல் என்று கேட்டார். நான் அரோராவுடன் உறவை நீட்டிக்க விரும்புகிறேன் என்று சொல்வார். ஏன் என்றால் அரோரா உண்மை உடன் இருப்பார் என்று சொல்வார். இதன் மூலமாக பாரு பொய் பித்தலாட்டக்காரி என்று குறிப்பிடுவது போன்று அரோராவை எப்போதும் உண்மையுடன் இருப்பார் என்று கூறி அவருடன் உறவை நீட்டிக்க விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.