பிளான் போட்டு தேதியை உறுதி செய்த தனுஷ்..! உற்சாகத்தில் ரசிகர்கள்!

Published : Aug 08, 2019, 06:18 PM IST
பிளான் போட்டு தேதியை உறுதி செய்த தனுஷ்..! உற்சாகத்தில் ரசிகர்கள்!

சுருக்கம்

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் 'அசுரன்' படத்தின், ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி தனுஷ் ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.  

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் 'அசுரன்' படத்தின், ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி தனுஷ் ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

வெக்கை என்கிற நாவலை தழுவி எடுக்கப்பட்டு வரும் 'அசுரன்' படத்தின் படப்பிடிப்பு, விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது இப்படத்தின் இறுதி கட்ட காட்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில் பிரபல மலையாள நடிகை 'மஞ்சு வாரியார்' தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார். தனுஷ் ராஜ தேவன் மற்றும் காலி என இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார்.

மேலும் கருணாஸின் மகன் கென், பாலாஜி சக்திவேல், பசுபதி, ஆடுகளம் நரேன், யோகிபாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். ஜி.வி.பிரகாஷ் தன்னுடைய இசையால் இந்த படத்திற்கு வலு சேர்த்திருக்கிறார்.

இந்நிலையில் 'அசுரன்' படத்தின் ரிலீஸ் தேதியை தற்போது நடிகர் தனுஷ் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்... "அக்டோபர் 4ஆம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளார். தொடர்ந்து, ஆயுத பூஜை மற்றும் விஜய தசமி என நான்கு நாட்கள் விடுமுறை வருவதால், பிளான் போட்டு தேதியை உறுதி செய்துள்ளார் தனுஷ். எது எப்படி இருந்தாலும் 'அசுரன்' ரிலீஸ் தனுஷ் ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.
 
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Lokesh Kanagaraj: A சான்றிதழ் கொடுத்த அதிர்ச்சி – ‘கூலி’யால் லோகேஷ் கனகராஜ் சந்தித்த இழப்பு.!
நீத்துவால் ரவி -ஸ்ருதி டைவர்ஸ் பண்ணப்போறாங்களா? ஷாக் கொடுக்கும் மனோஜ் - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்