
மலையாளத்தில் கடந்த 2001 ஆண்டு அறிமுகமானவர் நடிகை அசின், அதை தொடந்து தெலுங்கு, தமிழ், இந்தி என அனைத்து மொழி திரையுலகிலும் கால் பதித்து, முன்னணி நடிகையாக வளர்ந்தார்.
இவர் தமிழில் அறிமுகமான 'எம்.குமரன் சன் ஆப் மஹாலக்ஷ்மி' இவருடைய திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இதைதொடந்து வெளியான 'உள்ளம் கேட்குமே', 'சிவகாசி, கஜினி, போன்ற படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்றது. இதனால் இவருடைய மார்க்கெட் உயர்ந்து வரிசையாக முன்னணி நடிகர்கள் படங்களில் மட்டுமே நடிக்க துவங்கினார்.
பின் பாலிவுட் சென்ற அசின் அங்கும், தன்னுடைய வெற்றி கொடியை நாட்டினார். முன்னணி நடிகையாக இருக்கும் போதே... 2016 ஆண்டு, மைக்ரோ மேக்ஸ் நிறுவனத்தின், நிறுவர்களில் ஒருவரான ராகுல் ஷர்மா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு முழுமையாக திரையுலகை விட்டு விலகினார்.
தற்போது இவருக்கு ஒன்றரை வயதில் ஆரின் என்கிற பெண் குழந்தை உள்ளது. ஏற்கனவே தன்னுடைய மகள் பிறந்த நாள் அன்று அவருடைய புகைப்படத்தை முதல் முறையாக வெளியிட்டிருந்தார் நடிகை அசின். அதை தொடர்ந்து தற்போது ஆரின், பைக் மேல் நிற்பது போன்றும், அருகே நிற்பது போன்றும், மிகவும் ஸ்டைலிஷாக உள்ள புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
இந்த புகைப்படத்தில் அசின் மகள் ஆரின், செம்ம மாஸ்ஸாக உள்ளார் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.