Ashwin : தத்துக்குட்டி போல பேசி அசிங்கப்பட்ட அஸ்வின்...பதற்றத்தில் உளறியதாக விளக்கம்!!

By Kanmani PFirst Published Dec 8, 2021, 2:11 PM IST
Highlights

Ashwin : முதல் பெரிய மேடை என்பதால் பதற்றத்தில் 40 கதையையும் கேட்டு தூங்கியதாக பேசிவிட்டேன் என கூறியுள்ளார் குக் வித் கோமாளி அஸ்வின்.

சின்னத்திரையிலிருந்து பெரிய திரைக்கு வர பலரும் கடும் முயற்ச்சி செய்து வருகின்றனர். இதில் சிலருக்கு மட்டுமே கனவு நினைவாகிறது. பலருக்கும் இன்னுமா எட்டாக்கனியாகவே திரை நுழைவு உள்ளது. அவ்வாறு எளிதில் கிடைத்த புகழை சிவகார்த்தியேகன் போன்ற நடிகர் தங்களது கடின உழைப்பால் மெருகேத்தி கொள்வதும் சிலர் தங்களது மமதையால் மீண்டும் பழைய இடத்திற்கே வருவதும் நாம் பார்த்த உண்மை தான்.

அப்படிதான் தற்போது குக் வித் கோமாளி மூலம் பிரபலமான அஸ்வின் நிலை உள்ளது. விளம்பர படங்களில் மாடலாக நடித்து வந்த அஸ்வின் குமார் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி மூலம் பலரும் அறியும் நபராக மாறிப்போனார். இதன்பிறகு இவர் நடித்த ஆல்பம் சாங் நல்ல ஹிட் அடித்திருந்தது. இதையடுத்து பட வாய்ப்பு கிடைக்க தற்போது என்ன சொல்ல போகிறாய் என்னும் படத்தில் நடித்துள்ளார் அஸ்வின்.  

புதுமுகம் ஹரிஹரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் ரிலீஸுக்கு தயராகி வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற இந்த படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய அஸ்வின் வாய்க்கு வந்தபடி உளறி கொட்டியுள்ளார்.அதிலும் அவர் இயக்குனர்கள் குறித்து பேசியிருந்த கருத்து அவரது புகழை அதலபாதாளத்திற்கே தள்ளி விட்டதாக தெரிகிறது.

நிகழ்ச்சி நடைபெற்ற 6-ம் தேதி மதியம் முதலே அஸ்வின் தன ட்ரெண்டிங் அதோ அஸ்வின்,இதோ அஸ்வின் என பெண் ரசிகைகள் சமூகவலைத்தளத்தை ஆக்கிரமித்து வைத்திருந்தது. பின்னர் மேடையில் அஸ்வின் பேசிய பிறகும் அவர் தான் ட்ரெண்டிங் ஆனால் இந்த முறை ரசிகைகளுக்கு பதிலாக மீம்ஸ் கிரியேட்டர்கள் அஸ்வினை கழுவி ஊற்றி வண்டனர்.

அப்படி என்னதான் சொன்னார் என்றால்... அஸ்வின் இது வரை நடித்துள்ளது ஒரே ஒரு படத்தில் தான் அதுவும் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை அப்படி இருக்க இவரிடம் 40 கதைகள் சொல்லப்பட்டதாகவும்  அந்த கதைகளை கேட்டு தான் தூங்கி விட்டதாகவும், தான் தூங்காத ஒரே கதை என்ன சொல்ல போகிறாய் தான் என சொல்லி இருக்கிறார்.

நண்பர்களுக்கிடையே பேசுவது போல அஸ்வினின் பேச்சுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது குறித்து  தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த அஸ்வின் ; ''அது நான் கலந்துகொண்ட முதல் பெரிய நிகழ்வு என்பதால் நான் மிகவும் பதற்றமாக இருந்தேன். நான் என்ன பேசவேண்டும் என்று தயார் செய்துகொண்டும் செல்லவில்லை. ரசிகர்கள் அங்கு என் மீது பொழிந்த அன்பில் என்ன பேசுவதென்றே எனக்குத் தெரியவில்லை. என்னிடம் கதை சொன்ன எந்தவொரு இயக்குநரையும் அவமதிக்க வேண்டும் என்கிற நோக்கம் எனக்கில்லை. நான் பேசியது இந்த அளவு மோசமான விளைவை ஏற்படுத்தும் என்று நான் நினைக்கவில்லை. அதற்குப் பின்னாலிருக்கும் உணர்வுகளை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. எனினும், அதில் எந்த நோக்கமும் இல்லை.

நான் கதைகளின் எண்ணிக்கையைச் சற்று மிகைப்படுத்திச் சொல்லிவிட்டேன். நான் இதற்கு முன்பு 40 கதைகளைக் கேட்டதில்லை. நண்பர்களிடம் பேசும்போது ஏதோவொரு எண்ணைச் சொல்வோம். ஆனால், அதுபோன்ற ஒரு சுதந்திரத்தை நான் மேடையில் எடுத்துக் கொண்டிருக்கக் கூடாது.

நான் குறிவைக்கப்பட்டதாக உணர்கிறேன். இந்தப் பிரச்சினை தவறான நோக்கில் பூதாகரமாக்கப் படுகிறது. நான் சிலரது படங்களில் நடிக்க மறுப்பு தெரிவித்ததால் அவர்கள் என் மீது வன்மத்தைக் கக்கி வருகின்றனர். அது மரியாதைக் குறைவு அல்ல என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

இயக்குநர் ஹரிஹரன் கூட அவரது பேச்சைத் தயார் செய்யவில்லை. நாங்கள் நண்பர்கள் குழுவில் பேசிக் கொள்வதைப் போலப் பேசினோம். சூப்பர் ஸ்டார் ஒருவர் மட்டுமே. அவர் யார் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அது நான் இல்லை'' ,இவ்வாறு அஸ்வின் கூறியுள்ளார்.

click me!