'ஆர்யா 34' படத்தில் ஹீரோயினாகும் சிம்பு பட நாயகி..! பூஜையுடன் துவங்கியது படப்பிடிப்பு..!

Published : Oct 09, 2022, 03:06 PM IST
'ஆர்யா 34' படத்தில் ஹீரோயினாகும் சிம்பு பட நாயகி..! பூஜையுடன் துவங்கியது படப்பிடிப்பு..!

சுருக்கம்

'விருமன் ' படத்தின் வெற்றியை தொடர்ந்து, இயக்குநர் முத்தையா இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிக்கும் 'ஆர்யா 34' திருப்பிடம் இன்று பூஜையுடன் இனிதே துவங்கியது.   

'ஜீ ஸ்டூடியோஸ் & ட்ரம்ஸ்டிக் புரடக்சன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் முத்தையா இயக்கத்தில், உருவாகும் இப்புதிய படம் இன்று காலை எளிமையான பூஜையுடன் இனிதே தொடங்கியது. இந்திய சினிமாவில் பல வெற்றிப்படங்களை தந்த  ஜீ ஸ்டூடியோஸ் & டிரம்ஸ்டிக்ஸ் புரடக்சன்ஸ் நிறுவனங்கள் இணைந்து, ஆர்யா 34 படத்தை தயாரிக்கின்றன. “டெடி, சார்பட்டா பரம்பரை மற்றும் கேப்டன்” என   மாறுப்பட்ட படங்கள் மூலம் தொடர் வெற்றிகளை தந்து வரும் நடிகர் ஆர்யா, இப்படத்தில் நாயகனாக நடிக்கிறார். இயக்குநர் கௌதம் மேனனின் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் அறிமுகமாகி, ஒரே படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த நடிகை சித்தி இதானி இப்படத்தில் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார். 

மேலும் செய்திகள்: ஆட்டம்... பாட்டத்தோடு கோலாகலமாக துவங்கும் பிக்பாஸ் சீசன் 6..! வெளியானது கலர் ஃபுல் புரோமோ..!
 

ட்ரம்ஸ்டிக் புரடக்சன்ஸ் உடன் இணைந்தது குறித்து  ஜீ ஸ்டுடியோவின் சவுத் மூவிஸ் தலைவர் அக்‌ஷய் கெஜ்ரிவால் கூறுகையில்…, “இயக்குநர் முத்தையா இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகும் எங்களது அடுத்த திரைப்படத்தில்  ட்ரம்ஸ்டிக்ஸ் புரடக்சன்ஸ் உடன்  இணைந்து பணியாற்றுவது மிகுந்த மகிழ்ச்சியை தந்துள்ளது. ஆர்யா தொடர்ந்து  மாறுப்பட்ட பாத்திரங்களில்  வித்தியாசமான படங்கள் மூலம்  பார்வையாளர்களை மகிழ்வித்து வருகிறார். மேலும் இயக்குநர்  முத்தையா அனைத்து தரப்பு ரசிகர்களின் நாடித்துடிப்பை நன்கு புரிந்து கொண்டவர். இவர்கள் கூட்டணி பார்வையாளர்களுக்கு ஒரு மிகச்சிறந்த பொழுதுபோக்கு திரைப்படத்தை வழங்கும் என்பது உறுதி. 

சிறந்த உள்ளடக்கங்கள் கொண்ட, பல அற்புதமான படங்களை வழங்கிய ட்ரம்ஸ்டிக் புரடக்சன்ஸ்  நிறுவனத்துடன் இணைந்திருப்பது எங்களுக்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.  நாங்கள் அனைவரும்  பார்வையாளர்களுக்கு ஒரு சிறப்பான  அனுபவத்தை தரும், நல்ல படைப்பை வழங்குவோம்  என்று நம்புகிறோம்' என தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்: விஜய் டிவி சீரியல் நடிகர் ஆர்ணவ் மீது அதிரடி வழக்கு பதிவு..! பூதாகாரமாக வெடிக்கும் திவ்யா ஸ்ரீதர் கொடுத்த புகா
 

இந்த படத்தையும் கிராமத்து பின்னணியில், அனைவரும் குடும்பத்துடன் ரசிக்கும்படியான, வெற்றிகரமான கமர்ஷியல் படங்களை வழங்கும் இயக்குநர் முத்தையா இப்படத்தினை இயக்குகிறார். இப்படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார், வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார், வீரமணி கலை இயக்கம் செய்கிறார். தொடர்ந்து கிராமத்து கதையம்சம் கொண்ட படங்களையே இயக்கி வரும் முத்தையா, இந்த படத்தையும் கிராமத்து மனம் கமழும் படமாகவே இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

பிக் பாஸ் எலிமினேஷனில் செம ட்விஸ்ட்... அதிரடியாக எவிக்ட் ஆன இரண்டு பேர் யார்... யார்?
சென்னைக்கு 6500 ரூபா டிக்கெட் இப்போ 83 ஆயிரம்... இண்டிகோ பிரச்சனையால் வெளிமாநிலத்தில் லாக் ஆன ரோபோ சங்கர் மகள்