சமூக வலைதளங்களில் வைரலாகும் அருவி டீஸர் !

 
Published : Nov 12, 2017, 02:13 PM ISTUpdated : Sep 19, 2018, 01:25 AM IST
சமூக வலைதளங்களில் வைரலாகும் அருவி டீஸர் !

சுருக்கம்

aruvi teaser viral

ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் S.R.பிரபு , S.R.பிரகாஷ் பாபு தயாரிப்பில் , அறிமுக இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் அருவி. படத்தின் போஸ்டர் சில நாட்களுக்கு முன் வெளியாகி அனைவரிடமும் நல்ல வரவேற்ப்பையும். சமூக வலைதளங்களில் சலசலப்பையும் ஏற்படுத்தியது. 

நன்கு அலங்காரம் செய்த பெண் கையில் துப்பாக்கியோடு இருப்பது போல் அருவி படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளிவந்தது. இந்த போஸ்டர் வெளியான சிலநிமிடங்களில் “ பாரத மாதா “ கையில் துப்பாக்கியோடு இருக்கிறார் என்று சிலர் ட்விட்டர் முதலிய சமூக வலைதளங்களில் போஸ்ட் செய்ய அது முதல் தொடங்கியது இதை பற்றிய விவாதம்.

இதை தொடர்ந்து ஒரு பெண் புகைப்பிடிப்பது போல மீண்டும் ஒரு புகைப்படம் அருவியில் இருந்து வந்தது. “ பெண் புகைபிடிக்கும் “ அந்த புகைப்படம் மிகப்பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பிக்கொண்டிருக்க. மேலும் சர்ச்சை கிளப்பும் வகையில் அருவி பீர் பாட்டிலை கையில் வைத்துக்கொண்டு இருப்பது போல் ஒரு போஸ்டர் வெளிவந்தது. 

டீஸரை பற்றிய அறிவிப்பை அந்த போஸ்டரின் மூலம் வெளியிட்டது தயாரிப்பு நிறுவனம். இந்த சர்ச்சை நின்று போவதற்கு முன்னரே அருவி டீஸர் சமூகவலைதளங்களில் சென்ற வியாழன் அன்று வெளிவந்து மிகப்பெரிய பரபரப்பை கிளப்பியது குறிப்பிடத்தக்கது. வழக்கமாக படத்தில் தான் அதிக பீப் காட்சிகள் இடம்பெறும். ஆனால் அருவி டீஸரே பல இடங்களில் பீப்புடன் வெளிவந்துள்ளது. 

டீஸரில் தீவிரவாதி அருவியை விசாரிக்கும் அதிகாரி “ “ அல்லுமாவா.... மாவோஸ்டா... நக்ஸசல்பாரியா ? என்பது போலும். டீஸரின் முடிவில் அருவி “ கை வை பார்ப்போம் “ என்று கூறுவது போல் டீஸர் முடிகிறது. 

டீசரில் இடம்பெற்ற கை வை பாப்போம் என்ற வசனத்தை எல்லோரும் ட்விட்டரில் ஹாஷ் டேகாக பதிவிட்டு வருகிறார்கள். தற்போது வெளியாகியுள்ள அருவி டீஸர் மற்றும் பாடல்கள் சமூக வலைதளங்களில் வெளியான சில மணி நேரங்களில் லட்சத்திற்கும் மேற்ப்பட்டோர் இதை பார்த்துள்ளனர்.

வழக்கமாக தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களின் படங்கள் தான் யூடியுபில் நம்பர்-1 என்ற ட்ரெண்டை பிடிக்கும். தற்போது வெளிவந்துள்ள அருவி டீஸர் Youtube Indiaவில் நம்பர் ஒன்றாக டிரண்டாகி வருவது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் தயாரிப்பு நிறுவனம் நடத்திய சிறப்பு திரையிடலில் கலந்து கொண்ட பிரபல எழுத்தாளர்கள் , சினிமா ஆர்வலர்கள் , விமர்சகர்கள் என பலரும் தங்களுது சமூக வலைதள பக்கத்தில் அருவியை பாராட்டி எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் அருவியை பாராட்டி ட்வீட் செய்திருந்தார். திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்னரே ஷாங்காய் திரைப்பட விழா உள்ளிட்ட பல திரைப்பட விழாக்களில் நல்ல வரவேற்ப்பை பெற்ற அருவி படத்தின் ட்ரைலர் வருகிற 16 தேதியும் , படம் வருகிற டிசம்பர் மாதம் 1-ஆம் தேதி  வெளியாகவுள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஐட்டம் டான்ஸுக்காகவே ஆட்டநாயகியை தேடிப் பிடிக்கும் நெல்சன்: ஜெயிலர் 2, ரஜினி ஃபீலிங்க்ஸ் நிறைவேறுமா?
சாப்பாட்டுக்காகவே போகிறோம்; கல்யாண வீட்டில் ஏன் கரண் ஜோஹர் சாப்பிடுவதில்லை? காரணம் என்ன?