அடிக்கவும் தெரியணும்... நடிக்கவும் தெரியணும்... அருண்ராஜா காமராஜ் படத்தில் நடிக்க அருமையான வாய்ப்பு

 
Published : Sep 06, 2017, 07:41 PM ISTUpdated : Sep 19, 2018, 01:09 AM IST
அடிக்கவும் தெரியணும்... நடிக்கவும் தெரியணும்... அருண்ராஜா காமராஜ் படத்தில் நடிக்க அருமையான வாய்ப்பு

சுருக்கம்

Arunraja karamarj give the chance for young criket players

அருண்ராஜா காமராஜ் தான் இயக்கத்தில் கால் பதிக்கும் செய்தியை வெளியிட்டதிலிருந்தே  அது குறித்து சினிமா  ரசிகர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு அவர் இயக்குனர் அவதாரம் எடுத்தது மட்டுமில்லாமல் அவர் அதற்கு தேர்ந்தெடுத்துள்ள கதை களமும் தான் காரணம்.

 இதுவரை இந்திய சினிமாவிலேயே யாரும் கையாலாத பெண்கள் கிரிக்கெட்டை பற்றி ஒரு கதையை எழுதி இயக்கவுள்ளார் அருண்ராஜா காமராஜ். இந்திய கிரிக்கெட் அணிக்கு  விளையாடியவரும், பயிற்சியாளருமான தேவிகா பஃல்ஷிகார் இப்படத்திற்கு தனது ஆதரவை தெரிவித்தது மட்டுமில்லாமல் இப்படத்திற்கு தன்னால் முடிந்த  அனைத்து  உதவியையும் தான் செய்ய தயாராக இருப்பதாக கூறியிருப்பது தான் தற்போதய பரபரப்பான செய்தி.

தேவிகா இந்த அறிவிப்பு தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக்களிப்பதாகவும், அவரது உதவியை சந்தோஷமாக ஏற்றுக்கொள்வதாகவும், இப்படத்தின் தரத்திற்கும் விளம்பரத்திற்கு இது மிகவும் உதவியாக இருக்கும் எனவும் அருண்ராஜா காமராஜ் கூறியுள்ளார்.

இப்படத்தில் இந்திய பெண்கள் அணியை சேர்ந்த யாரேனும் நடிக்க விரும்பினால் தான் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வதாகவும் அருண்ராஜா கூறியுள்ளார். ஒரு பெரிய அளவில் இப்படத்திற்கான நடிகைகள் தேர்வு நடத்தப்படவுள்ளது. கிரிக்கெட் ஆட தெரிந்த, நன்கு நடிக்கவும் தெரிந்த பெண்களுக்கு இந்த தேர்வு ஒரு அருமையான வாய்ப்பாக அமையும் என நம்பப்படுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!