தனது 25 வது படத்துக்கு கவுதம் மேனனை தேடிச்சென்று வாய்ப்புக் கேட்ட ஹீரோ...

Published : Apr 16, 2019, 05:00 PM IST
தனது 25 வது படத்துக்கு கவுதம் மேனனை தேடிச்சென்று வாய்ப்புக் கேட்ட ஹீரோ...

சுருக்கம்

தனது 25 வது படத்தை இயக்கித் தரும்படி இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனனை நடிகர் அருண் விஜய் தேடிச் சென்று வாய்ப்புக் கேட்டதாகவும் அதற்கு கவுதம் கிரீன் சிக்னல் காட்டியிருப்பதாகவும் தகவல்கள் நடமாடுகின்றன.

தனது 25 வது படத்தை இயக்கித் தரும்படி இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனனை நடிகர் அருண் விஜய் தேடிச் சென்று வாய்ப்புக் கேட்டதாகவும் அதற்கு கவுதம் கிரீன் சிக்னல் காட்டியிருப்பதாகவும் தகவல்கள் நடமாடுகின்றன.

’95ல் தனது 16 வது வயதில் ’முறை மாப்பிள்ளை’படத்தில் அறிமுகமான அருண் விஜய் இன்று வரை தமிழ் சினிமாவில் சொல்லிக்கொள்ளும் ஒரு இடத்தைப் பிடிக்கவில்லை. கடைசியாக வெளியாகி வெற்றி பெற்ற மகிழ் திருமேனியின் ‘தடம்’ போன்ற வெகு சில படங்களே அவரை நடிகர்கள் லிஸ்டில் தொடர்ந்து வைத்துக்கொள்ள உதவியிருக்கின்றன.

இந்நிலையில் மிக விரைவில் தனது 25 வது படத்தை அருண்விஜய்  அறிவிக்கவிருப்பதை தெரிந்துகொண்ட அவரது நண்பர்கள் ‘இந்தப் படத்துக்கு ஒரு பெரிய டைரக்டரைப் புடிச்சி அடுத்த கட்டத்துக்கு நகர்ற வழியைப் பாரு’ என்று ஆலோசனை கூறவே சற்றும் யோசிக்காமல், ஏற்கனவே அஜீத்தின் ‘என்னை அறிந்தால்’ படத்தில் முக்கிய வில்லன் வேடம் கொடுத்த கவுதம் மேனனைத் தேடிப்போய் வாய்ப்புக் கேட்டாராம் அருண்.

அருண் விஜயின் விருப்பத்துக்கு ஓ.கே. சொன்ன கவுதம் தான் தற்போது தனியார் தொலைக்காட்சிக்காக இயக்கிவரும் ஜெயலலிதாவின் வாழ்க்கைத் தொடரான’குயீன்’ஐ முடித்தவுடன் அப்படத்தைத் தொடங்கலாம் என்று சொல்லியிருக்கிறாராம்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அதிரடி வெற்றிகள் முதல் சர்வதேச கவனம் வரை: 2025-ல் அதிகம் டிரெண்டிங்கில் இருந்த டாப் 5 இயக்குநர்கள் யார் யார்?
நாட்டாமை டீச்சரின் மகளா இது? அம்மாவை தொடர்ந்து சரத்குமாருடன் நடித்த மகள்: ரசிகர்கள் அதிர்ச்சி!