Arulvaan: ரிலீஸுக்கு முன்பே பழங்குடியினருக்கு ஸ்பெஷல் ஷோ - கண்ணீர் விட்டுப் பாராட்டிய மக்கள்!

Ganesh A   | ANI
Published : Jul 16, 2026, 02:02 PM IST
Arulvaan Special Screening Brings Joy and Tears to Anamalai Tribal Community

சுருக்கம்

Arulvaan Movie : நடிகர் அருள்நிதியின் 'அருள்வான்' திரைப்படம், ஜூலை 17-ல் ரிலீஸ் ஆவதற்கு முன்பே, பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பக பழங்குடியின மக்களுக்காக பிரத்யேகமாக திரையிடப்பட்டது.

நடிகர் அருள்நிதி நடித்துள்ள 'அருள்வான்' திரைப்படம், திரையரங்குகளில் ஜூலை 17 அன்று வெளியாவதற்கு ஒரு நாள் முன்னதாக, வியாழக்கிழமை அன்று பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பக பழங்குடியின மக்களுக்காக ஒரு சிறப்பு காட்சியாக திரையிடப்பட்டது. தங்கள் வாழ்க்கையையும், போராட்டங்களையும் நெருக்கமாகப் பிரதிபலிக்கும் இந்தப் படத்தைப் பார்க்க, 100-க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. இந்த சிறப்புத் திரையிடலை படத்தின் தயாரிப்புக் குழு, பொள்ளாச்சியில் உள்ள சக்தி சினிமாஸ் திரையரங்கில் ஏற்பாடு செய்திருந்தது.

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து மக்கள் வருவதற்கு போக்குவரத்து வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும், இந்த நிகழ்வில் கலந்துகொண்ட பழங்குடியின பள்ளி மாணவர்களுக்கு இலவசமாகப் பள்ளிப் பைகளும் பரிசாக வழங்கப்பட்டன. 'அருள்வான்' திரைப்படம், தலைமுறை தலைமுறையாக மலைப் பகுதிகளில் வசிக்கும் பழங்குடியின மக்களின் பாரம்பரிய வாழ்க்கை முறையைச் சித்தரிக்கிறது. பழங்குடி குடும்பங்கள் எதிர்கொள்ளும் கஷ்டங்கள், அவர்களின் அன்றாட வாழ்வில் உள்ள சவால்கள் ஆகியவற்றை மையப்படுத்தி, பெண் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, சமூகத்தில் ஒரு பெரிய விழிப்புணர்வை உருவாக்கும் நோக்கத்தில் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.

அருள்வான் ஸ்பெஷல் ஷோ

படத்தைப் பார்த்த பழங்குடியின மக்கள், இது தங்களின் சொந்த அனுபவங்களை அப்படியே திரையில் காட்டுவது போல இருப்பதாகக் கூறினர். பல உணர்ச்சிகரமான காட்சிகளில் தங்களுக்குக் கண்ணீர் வந்ததாகவும், குறிப்பாகப் பெண் கல்வியின் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்தியதற்காக படக்குழுவைப் பாராட்டியதாகவும் பல பார்வையாளர்கள் தெரிவித்தனர். இந்தத் திரையிடலுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய, ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கீழ் வரும் டாப்ஸ்லிப், எருமைப்பாறை பகுதியைச் சேர்ந்த பழங்குடிப் பெண் பத்மினி, மலைவாழ் மக்கள் படும் கஷ்டங்களை இந்தப் படம் துல்லியமாகப் பிரதிபலிப்பதாகக் கூறினார்.

"நடிகர் அருள்நிதி நடிச்ச இந்த 'அருள்வான்' படத்துல காட்டுற வாழ்க்கை, மலைவாழ் சமூகங்கள் படுற கஷ்டங்களை அப்படியே காட்டுது," என்று அவர் சொன்னார். மேலும், தங்கள் குடியிருப்புக்கு அருகே உள்ள பரம்பிக்குளம் சாலை வழியாக மின்சாரக் கம்பிகள் சென்றாலும், தங்கள் பகுதிக்கு இன்னும் மின்சாரம் இல்லை என்ற கவலையையும் அவர் எழுப்பினார். "பரம்பிக்குளம் சாலை வழியா மின்சார லைன் போகுது, ஆனா எங்க பழங்குடியினர் குடியிருப்புக்கு இன்னும் கரண்ட் இல்லாமதான் இருக்கு," என்று கூறிய அவர், "நாங்க எப்போ கரண்ட் இணைப்பு கேட்டாலும், அதிகாரிகள் வனத்துறை அமைச்சர்கிட்ட போங்க, அவர்தான் இந்த விஷயத்தை சரிபண்ண முடியும்னு சொல்றாங்க," என்றார்.

படத்தின் சித்தரிப்பு "100 சதவீதம் உண்மை" என்று விவரித்த அவர், "நான் சின்ன வயசுல இருந்து கரண்ட் இல்லாமதான் வாழ்ந்திருக்கேன். எங்க தலைமுறைக்கு மின்சாரம் கிடைக்கல. அடுத்த தலைமுறை பிள்ளைகளாவது நல்ல வெளிச்சத்துல படிச்சு, சிறந்த கல்வி வாய்ப்புகளைப் பெற இந்த வசதி கிடைக்கணும்னு நான் நம்புறேன்," என்று கூறினார். மாவட்ட ஆட்சியர் பலமுறை வந்து சென்றாலும், உருப்படியான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், பழங்குடியின சமூகத்திற்காக ஒன்பது வீடுகளைக் கட்டிக்கொடுக்க அதிகாரிகளுக்கு கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் ஆனது என்றும் பத்மினி குற்றம் சாட்டினார்.

மற்ற பழங்குடியின மக்களும், தங்களின் வாழ்வாதாரம் முழுக்க முழுக்க காட்டை நம்பித்தான் இருப்பதாகவும், அந்தக் காட்டைப் பாதுகாப்பதில் தாங்கள் நீண்டகாலமாக முக்கியப் பங்கு வகிப்பதாகவும் கூறினர். பல குழந்தைகள் முறையான கல்வி கிடைக்காமல் வளர்ந்து வருவதாகவும், படித்த இளைஞர்களுக்கு வேலை கிடைப்பதில் சிரமங்கள் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். தங்களின் பிரச்சினைகளை 'அருள்வான்' படம் மூலம் பரந்த பார்வையாளர்களிடம் கொண்டு சேர்த்ததற்காக, திரைப்படத் தயாரிப்பாளர் தனராஜுக்கு நன்றி தெரிவித்த அந்த மக்கள், "படத்தில் வர்ற மாதிரி ஒரு கலெக்டர் நிஜ வாழ்க்கையிலும் வந்து, எங்க நீண்டகாலக் குறைகளைத் தீர்க்க மாட்டாரா," என்று உருக்கமாகக் கோரிக்கை வைத்தனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

இந்த 2 கொரியன் படங்களின் கிளைமாக்ஸை உங்களால் கணிக்கவே முடியாது!
OTT : தமிழில் இப்படியொரு அடிபொலியான வெப் சீரிஸா? போலீஸ் vs சைக்கோ கில்லர்... ஒரு நிமிஷம் கூட போரடிக்காது!