ஓவியாவை திருமணம் செய்ய சம்மதமா? ஆரவிடம் போட்டு வாங்கிய ஆர்த்தி...

 
Published : Aug 30, 2017, 05:10 PM ISTUpdated : Sep 19, 2018, 01:07 AM IST
ஓவியாவை திருமணம் செய்ய சம்மதமா? ஆரவிடம் போட்டு வாங்கிய ஆர்த்தி...

சுருக்கம்

Arthi talking about oviya for Arav

பிக் பாஸ் வீட்டின் உள்ளே இருந்தபோது, ஓவியாவை பற்றி புரிந்துக்கொள்ளாத ஆர்த்தி வெளியில் சென்றதும் ஓவியாவை பற்றி புரிந்துக்கொண்டு அவருக்கு சப்போர்ட் செய்யும் விதத்தில் நிறைய ட்விட்களை போட்டார். மேலும் தானும் ஓவியா ரசிகையாக மாறிவிட்டதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு விருந்தினராக சென்றுள்ள ஆர்த்தி ஓவியாவின் காதலுக்கு உதவும் வகையில் ஆரவை அழைத்து ஓவியாவை பற்றி பேசுகிறார்.

முதலில் தற்போது ஓவியா எப்படி இருப்பார் என நீங்கள் நினைக்கிறீர்கள் என கேட்டார். இதற்கு ஆரவ் கண்டிப்பா நன்றாக இருப்பர் என பதில் கூறினார். இதனை தொடர்ந்து ஒரு வேலை 100 நாட்கள் கழித்து நீங்கள் வெற்றி பெற்று இங்கிருந்து செல்லும்போது உங்கள் முன் ஓவியா வந்து நின்றால் என்ன நினைப்பீர்கள் என ஆர்த்தி கேட்க அதற்கு ஆரவ் சந்தோஷமாக எடுத்துக்கொள்வேன் என தெரிவித்தார்.

மேலும் திடீர் என உங்களிடம் அவர் காதலை சொன்னால் என்ன தோன்றும்.. ஓவியா இது வரை அவருடைய எதிர்காலம், வேலை என எதையும் பார்க்கவில்லை. ஆனால் நீங்கள் அதையெல்லாம் நினைத்து அவரை தவிர்க்கிறீர்கள் என்பது போல் ஆர்த்தி கூறுகிறார்.

இதற்கு ஆரவ் அப்படியில்லை என்னுடைய குடும்பம், பெற்றவர்களை பற்றி நான் யோசிக்க வேண்டும் என கூறுகிறார். உடனே காஜல் ஆமாம் அதையெல்லாம் யோசிக்க வேண்டும் தான் என கூறி திடீர் என உங்களுடைய பெற்றோர் இந்த நிகழ்ச்சியை பார்த்து விட்டு ஓவியாவை திருமணம் செய்துகொள் என்று சொன்னால் திருமணம் செய்துகொள்வீர்களா...? என கேட்பது போல் இன்றைய ப்ரோமோ வெளியாகியுள்ளது.

உண்மையில் ஆராவின் பதில் என்னவாக இருக்கும் என பலரும் குழம்பியுள்ளனர். என்ன சொல்லுவார் ஆரவ் இன்றைய நிகழ்ச்சியில் தெரிய வரும்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அகண்டா 2 வசூல் வேட்டை: 10 நாட்களில் இத்தனை கோடியா? பாக்ஸ் ஆபிஸை அதிரவைக்கும் பாலகிருஷ்ணா!
தமிழ் பிக்பாஸ் 9ல் சிறந்த டாப் 5 போட்டியாளர்கள் யார் யார் தெரியுமா? டாப்பில் பாருவா?