தடபுடலாக தயாராகும் ஜெண்டில்மேன் 2 .. தேசிய விருது கலை இயக்குனரை புக் செய்த கே.டி.குஞ்சுமோன்!

Published : Jun 24, 2022, 06:56 PM IST
தடபுடலாக தயாராகும் ஜெண்டில்மேன் 2 .. தேசிய விருது கலை இயக்குனரை புக் செய்த கே.டி.குஞ்சுமோன்!

சுருக்கம்

 'ஜென்டில்மேன்' படத்தின் இரண்டாம் பாகத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இதன் புதிய தகவலாக மூத்த கலை இயக்குனர் தோட்டா தரணிஇணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

1993 ஆம் ஆண்டு தமிழில் வெளியான 'ஜென்டில்மேன்' படத்தின் இரண்டாம் பாகத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். நடிகர்கள் மற்றும் குழுவினர் இடம் பெற்றுள்ள நிலையில், இந்த படத்தை கோகுல் கிருஷ்ணா இயக்குவதாகவும், படத்தை கே.டி குஞ்சுமோன் தயாரிக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

இந்த படத்தின் டீமில் மூத்த கலை இயக்குனர் தோட்டா தரணி இணைவதாக சமீபத்திய தகவல் தெரிவிக்கிறது. சுவாரஸ்யமாக, தோட்ட தரணி 'ஜென்டில்மேன்' படத்தின் கலை இயக்குநராகவும் இருந்தார். மேலும், இப்படத்திற்கு எம்.எம்.கீரவாணி இசையமைக்க, அஜயன் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.

'ஜென்டில்மேன் 2' படத்தில் நயன்தாரா சக்ரவர்த்தி மற்றும் ப்ரியா லால் நடித்துள்ளனர். ஆனால் படத்தின் நாயகன் யார் என்பதை படக்குழு இன்னும் அறிவிக்கவில்லை. இதற்கிடையில், படத்தின் ப்ரீ புரொடக்ஷன் இந்த ஆண்டு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜென்டில்மேன் எஸ். ஷங்கர் தனது இயக்குனராக அறிமுகமான படமாகும். கே.டி.குஞ்சுமோனால் தயாரிக்கப்பட்டது. இப்படத்தில் அர்ஜுன், மதுபாலா மற்றும் சுபாஸ்ரீ ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் எம்.என்.நம்பியார், மனோரமா, கவுண்டமணி, செந்தில், சரண்ராஜ், வினீத் மற்றும் ராஜன் பி.தேவ் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். 


ஜென்டில்மேன் 30 ஜூலை 1993 இல் வெளியிடப்பட்டது, மேலும் விநியோகஸ்தர்கள் தயக்கம் காட்டியதால் குஞ்சுமோனால் விநியோகிக்கப்பட்டது. இத்தி ரைப்படம் பாக்ஸ் ஆபிஸ் வெற்றியைப் பெற்றது.175 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடிய இந்த படம் மூன்று தென் பிலிம்பேர் விருதுகளை, நான்கு தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள் மற்றும் ஐந்து சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகள் பெற்றது. இப்படம் இந்தியில் தி ஜென்டில்மேன் (1994) என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

தென்னிந்தியாவில் வசூல் ராஜா யார்? 2025ல் பாக்ஸ் ஆபிஸை அதிரவிட்ட டாப் 10 மூவீஸ் ஒரு பார்வை
யாரும் எதிர்பார்க்காத முடிவை எடுக்கும் ஆதி குணசேகரன்... எதிர்நீச்சல் சீரியலில் அடிபொலி ட்விஸ்ட் வெயிட்டிங்