'அர்ஜுன் ரெட்டி' பட ரீமேக் உரிமை குறித்து தனுஷின் பட நிறுவனம் விளக்கம்! 

Asianet News Tamil  
Published : Sep 05, 2017, 11:50 AM ISTUpdated : Sep 19, 2018, 01:08 AM IST
'அர்ஜுன் ரெட்டி' பட ரீமேக் உரிமை குறித்து தனுஷின் பட நிறுவனம் விளக்கம்! 

சுருக்கம்

Arjun reddy move remake dhanush production give explanation

கோலிவுட் திரையுலகில் மிகச் சிறந்த படங்களைத் தயாரிக்கும் பட நிறுவனங்களில் ஒன்று நடிகர் தனுஷின் 'வன்டெர்பார் நிறுவனம்'. இந்நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட அனைத்து திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன, ’காக்கா முட்டை’ உள்ளிட்ட படங்கள் தேசிய விருதைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.  

இந்நிலையில் அண்மையில்  தெலுங்கில் வெளியாகி  சூப்பர்ஹிட் ஆன ‘அர்ஜுன் ரெட்டி’ என்ற படத்தின் ரீமேக் உரிமையை தனுஷ் வாங்கியிருப்பதாகவும், இந்தப் படத்தை அவரே தயாரித்து அதில் நடிப்பார் என்றும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ஊடகங்களில் செய்திகள் பரவின.

தற்போது இதுகுறித்து விளக்கமளித்துள்ள தனுஷின் தயாரிப்பு நிறுவனமான வன்டெர்பார் பிலிம்ஸ், இதுவரை ’அர்ஜுன் ரெட்டி’ படத்தின் உரிமையை எங்களின் நிறுவனம் வாங்கவில்லை என்றும் இதுகுறித்து பரவிய தகவல் முற்றிலும் வதந்தி என்றும் விளக்கம் அளித்துள்ளது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Ethirneechal Thodargiradhu: ஜனனிக்கு விழுந்த பேரிடி! ஆதி குணசேகரனின் கொடூர திட்டம் பலித்ததா? எதிர் நீச்சல் தொடர்கிறது சீரியல் சீக்ரெட்.!
Draupathi 2: விறுவிறுப்பான திரைக்கதை.. அதிரடி வசூல்! இரண்டு நாட்களில் திரௌபதி 2 செய்த தரமான சம்பவம்!