பயம் வந்துடுச்சி... பிக்பாஸ்ஸிடம் கதறி அழுத அர்ச்சனா..! புரோமோ வீடியோ...

By manimegalai a  |  First Published Dec 16, 2020, 4:17 PM IST

பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி நாட்களை நெருங்க நெருங்க, போட்டிகள் கடுமையாகி கொண்டே போகிறது. இதனால் வீட்டில் உள்ளே இருப்பவர்கள் முட்டி மோதி கொண்டு தற்போதைய லக்சுரி டாஸ்கான, கோழிப்பண்ணை டாஸ்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
 


பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி நாட்களை நெருங்க நெருங்க, போட்டிகள் கடுமையாகி கொண்டே போகிறது. இதனால் வீட்டில் உள்ளே இருப்பவர்கள் முட்டி மோதி கொண்டு தற்போதைய லக்சுரி டாஸ்கான, கோழிப்பண்ணை டாஸ்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த டாஸ்கில் வெற்றி பெறுபவர்களுக்கு ஸ்பெஷல் பவர் கிடைக்கும் என்று பிக்பாஸ் அறிவித்துள்ளதால் போட்டி போட்டு இந்த விளையாட்டை அனைவரும் விளையாடி வருகிறார்கள். இந்த ஸ்பெஷல் பவரை பெற்று நாமினேஷன் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்ற நோக்கத்தில் ஒவ்வொருவரும் ஆக்ரோஷத்துடன் விளையாடுவதையும் பார்க்க முடிகிறது.

Tap to resize

Latest Videos

இன்றைய இரண்டாவது புரமோவில் அர்ச்சனாவின் முட்டையை சோம் எடுத்த போது அந்த முட்டை உடைந்து விட்டதாக அர்ச்சனா குற்றம் சாட்டினார். ஆனால் சோம் தான் உடைக்கவில்லை என்று இருவரும் ஒருவரை ஒருவர் மாறிமாறி குற்றம்சாட்டி நிலையில் தற்போது அடுத்த வீடியோ வெளியாகியுள்ளது.

இந்த வீடியோவில் அர்ச்சனா பிக்பாஸ் அறையில் கதறி அழுகிறார். எனக்கு பார்க்கும் போது பயமாக இருக்கிறது. நான் இங்கு வருவதற்கு காரணமாக நீ இருந்து விட்டாயோ என்று கூறுகிறார். இவர் பேசும் போது அர்ச்சனா முட்டையை தொட ரியோ மற்றும், சோம் ஆகியோர் போட்டி போடும் காட்சிகளும் இடம்பெறுகிறது. 

இதுபோன்ற சண்டையை நான் என் மொத்த வாழ்க்கையில் பார்த்தது இல்லை, என்னை இதுபோன்ற செயல்கள் நெகட்டிவாக காட்டுகிறது என ஆதங்கத்தை தெரிவிக்கிறார். எல்லாவற்றையும் அன்பால் ஜெயிக்க முடியும் என்கிற நம்பிக்கை வைத்து இங்கு வந்தேன் ஆனால் அது இல்லாமல் போய் விடுமோ என்கிற பயம் வந்துவிட்டதாக தெரிவிக்கிறார்.

இதுகுறித்த புரோமோ இதோ...


 

of - தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. pic.twitter.com/oOdo9x0hgy

— Vijay Television (@vijaytelevision)

click me!