அந்த அம்மாவுக்கு அறிவே இல்லையா? பொள்ளாச்சி பாலியல் விஷயத்தில் பாயிண்ட் பாயிண்டா பேசி... பிச்சி எடுத்த அறந்தாங்கி நிஷா!

By manimegalai aFirst Published Mar 15, 2019, 3:49 PM IST
Highlights

பொள்ளாச்சி பாலியல் சம்பவம் தொடர்பாக தொடர்ந்து,  அனைத்து பிரபலங்களும் தங்களுடைய கோவமான கருத்தை வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் பிரபல தனியார் தொலைக்காட்சி காமெடி நிகழ்ச்சி மூலம் பிரபலாமான அறந்தாங்கி நிஷா வீடியோ ஒன்றை வெளியிட்டு தன்னுடைய எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.
 

பொள்ளாச்சி பாலியல் சம்பவம் தொடர்பாக தொடர்ந்து,  அனைத்து பிரபலங்களும் தங்களுடைய கோவமான கருத்தை வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் பிரபல தனியார் தொலைக்காட்சி காமெடி நிகழ்ச்சி மூலம் பிரபலாமான அறந்தாங்கி நிஷா வீடியோ ஒன்றை வெளியிட்டு தன்னுடைய எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், "பொள்ளாச்சியில் மட்டும் இந்த கொடுமைகள்  நடக்கவில்லை. தினமும் ஒவ்வொரு பகுதியில் பெண்கள் பாலியல் தொந்தரவுகளால் பாதிக்கப்பட்டு கொண்டுதான் இருக்கின்றனர். சிறிய பெண் குழந்தைகளை கூட சில கொடூரர்கள் விடுவதில்லை. 

முன்பெல்லாம் கிராமப்புறங்களில், பெண் குழந்தைகள் பிறந்தால் கள்ளிப்பால் கொடுத்து அந்த குழந்தையை கொன்றுவிடுவார்கள். இனிமேல் அது மீண்டும் தொடரும் என நினைக்கிறேன். 15 வருடம் கழித்து யாரோ ஒருவன் நம் பெண் குழந்தைகளை கொல்வதைவிட நாமே கொன்றுவிடலாம் என ஒவ்வொரு பெற்றோரையும் நினைக்க வைத்துவிடாதீர்கள்.

திருநாவுக்கரசு தாயார் நேற்று பேட்டியளித்தபோது, 'யாரோ ஒரு ஐட்டத்தை கூட்டி வந்து வீடியோ எடுத்து மார்பிங் செய்துள்ளதாக கூறினார். அந்தம்மாவுக்கு அறிவே இல்லையா? ஒரு ஐட்டம் கத்துவதற்கும் அபலைப்பெண் கத்துவதற்கும் எங்களுக்கு வித்தியாசம் தெரியாதா?

பெண் குழந்தைகள் இப்போதுதான் அடுப்படையில் இருந்து பள்ளிக்கும், பள்ளியில் இருந்து கல்லூரிக்கும் அலுவலகத்திற்கு சென்று வருகின்றனர். அவர்களை மீண்டும் அடுப்படிக்கே தள்ளிவிடாதீர்கள். 

இந்த மாதிரி குற்றவாளிகளுக்கு அரசு பெரிதாக தண்டனை கொடுத்துவிடாது. இன்னும் தஷ்வந்துக்கு சோறு போட்டுக்கொண்டு இருக்கும் அரசாங்கம், இந்த குற்றவாளிகளை மட்டும் என்ன செய்துவிடும். ஒரே ஒரு ஆறுதல் இந்த குற்றவாளிகளுக்கு வாதாட மாட்டோம் என்று கூறிய வழக்கறிஞர்களுக்கு எனது நன்றிகள். என கூறியுள்ளார்.

இதற்கெல்லாம் போராட்டம் செய்து டைம் வேஸ்ட் செய்ய வேண்டாம். போராட்டம் செய்வதால் எந்தவித பயனும் இல்லை. நமக்கு இருக்கும் ஒரே ஒரு வாய்ப்பு தேர்தல்தான். வரும் தேர்தலில் யாருக்கும் ஓட்டு போடாதீங்க. அல்லது எல்லோரும் நோட்டாவுக்கு போடுங்க. அப்ப கேட்பாங்க ஏன் ஓட்டு போடலைன்னு. அப்போ சொல்லுங்க. பெண் குழந்தைகள் மீது தவறாக நடப்பவர்களை கொல்லும் உரிமை எங்களுக்கு வேண்டும் என்று. அதற்கு சட்டம் இயற்றுங்கள் என்று சொல்வோம். அதன்பின்னராவது குற்றங்கள் குறைய வாய்ப்பு உள்ளது என்று அறந்தாங்கி நிஷா கூறியுள்ளார்.

 

click me!