பாடகர் எஸ்.பி.பி. உடல்நிலை கவலைக்கிடம்... ரசிகர்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் வைத்த உருக்கமான கோரிக்கை...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Aug 14, 2020, 08:07 PM IST
பாடகர் எஸ்.பி.பி. உடல்நிலை கவலைக்கிடம்... ரசிகர்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் வைத்த உருக்கமான கோரிக்கை...!

சுருக்கம்

இதையடுத்து எஸ்.பி.பி. விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டுமென திரைத்துறை பிரபலங்கள் பலரும் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்திற்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து கடந்த 5ம் தேதி சென்னையில் இருக்கும் எம்.ஜி.எம். மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர். தன்னை மருத்துவர்கள் வீட்டிலேயே சிகிச்சை எடுத்துக்கொள்ள கூறியதாகவும், ஆனால் குடும்பத்தினர் நலன் கருதி மருத்துவமனைக்கு வந்ததாகவும் கூறினார். தான் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும்,  மருத்துவர்கள் தன்னை ஓய்வில் இருக்க சொல்லியுள்ளதால் யாரும் எனக்கு போன் செய்ய வேண்டாம் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார். 

நேற்று வரை மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டு வந்த அறிக்கையில், எஸ்பிபி நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும், சிறப்பு மருத்துவர்கள் கொண்ட குழு அவரை கண்காணித்து வருவதாகவும் கூறப்பட்டது. ஆனால் இன்று வெளியான அறிக்கையில், “எஸ்.பி. பாலசுப்பிரமணியத்திற்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் ஏற்பட்டதையடுத்து கடந்த 5ம் தேதியில் இருந்து எம்.ஜி.எம். மருத்துவமனையில் இருக்கிறார். நேற்று இரவு அவரின் உடல்நலம் திடீர் என்று மோசமடைந்தது. மருத்துவ நிபுணர்களின் அறிவுரையின்படி அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ளது. அவரின் நிலைமை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது” என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது. 

 

இதையும் படிங்க: நடிகர் தனுஷ் வீட்டில் விசேஷம்... ஒரே ஒரு போட்டோவால் கசிந்த ஒட்டுமொத்த ரகசியம்...!

இதையடுத்து எஸ்.பி.பி. விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டுமென திரைத்துறை பிரபலங்கள் பலரும் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இசை ரசிகர்கள் அனைவரும் என்னுடன் சேர்ந்து இந்த லெஜண்டுக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். #SPBalasubrahmanyam தன் அருமையான குரலால் நமக்கு இன்பத்தை கொடுத்துள்ளது என உருக்கமாக கோரிக்கை வைத்துள்ளார். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கோடி கோடியாக சம்பாரிச்சலும் கலைஞனுக்கு கை தட்டால் ரொம்ப முக்கியம் - சித்ரா லட்சுமணன்
யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்... ஆதி குணசேகரனால் ஆபத்தில் சிக்கும் ஜனனி - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி