சன் பிக்சர்ஸிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்கிறேன்... கதையை வெளியிட்டதற்கு காரணம் முருகதாஸே என்கிறார் பாக்கியராஜ்!

By vinoth kumarFirst Published Nov 2, 2018, 1:45 PM IST
Highlights

ஒரு எழுத்தாளனாக ‘சர்கார்’ கதையை வெளியே சொல்லவேண்டி வந்ததற்காக வருந்தி சன் பிக்சர்ஸிடம் மன்னிப்புக் கோருகிறேன்’ என்கிறார் இயக்குநர் பாக்கியராஜ்.

ஒரு எழுத்தாளனாக ‘சர்கார்’ கதையை வெளியே சொல்லவேண்டி வந்ததற்காக வருந்தி சன் பிக்சர்ஸிடம் மன்னிப்புக் கோருகிறேன்’ என்கிறார் இயக்குநர் பாக்கியராஜ்.‘சர்கார்’ கதை சர்ச்சை தொடர்பாக விசாரணையில் இருந்தபோது அதை வெளியிடும் எண்ணம் தனக்கு துளியும் இல்லை என்றும் அப்படிப்பட்ட நிர்பந்தமான சூழ்நிலைக்கு இயக்குநர் முருகதாஸ்தான் தன்னைத் தள்ளினார் என்றும் பாக்கியராஜ் தெரிவித்தார். 

செங்கோல்’ மற்றும் ‘சர்கார்’ கதைகளுக்கு இடையில் உள்ள கதை மூலத்தின் ஒற்றுமையை எடுத்துச்சொல்வதற்கு நான் எவ்வளவோ முறை முயன்றும் அதை முருகதாஸ் ஏற்றுக்கொள்ள மறுத்தார். மேலும் இவர், கதையின் அதே லைனை சங்கத்தில் பதிந்துவைத்து 11 வருடங்களாகக் காத்திருக்கும் வருண் ராஜேந்திரனையும்  அங்கீகரிக்க மறுத்தார். சங்கமோ வருண் ராஜேந்திரனுக்கு உதவுவதில் அக்கறையில்லாமல் இருந்தது. 

பிறகு பொதுவெளியில் அல்லாமல் வேறு எங்கு சொல்லி என்னால் நீதி கேட்க முடியும். எனவேதான் மிகுந்த மனவேதனையுடன் ‘சர்கார்’ கதையை வெளியே சொல்லவேண்டி வந்தது. இதற்காக படத்தின் தயாரிப்பாளர்கள் சன் பிக்சர்ஸிடம் வருத்தம் தெரிவிப்பதுடன் மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறேன்’ என்கிறார் பாக்கியராஜ்.

click me!