அப்பல்லோவிலிருந்து டிஸ்சார்ஜ் ஆனார் வைரமுத்து...! நெக்ஸ்ட் தேவை ரெஸ்ட்டாம்...

By vinoth kumarFirst Published Oct 20, 2018, 4:48 PM IST
Highlights

உணவு ஒவ்வாமை, மற்றும் லோ பி.பி. காரணமாக மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று திடீரென அனுமதிக்கப்பட்டிருந்த கவிப்பேரரசு வைரமுத்து இன்று மதியம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

உணவு ஒவ்வாமை, மற்றும் லோ பி.பி. காரணமாக மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று திடீரென அனுமதிக்கப்பட்டிருந்த கவிப்பேரரசு வைரமுத்து இன்று மதியம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். 

கடந்த மூன்று வாரங்களாக பாடகி சின்மயி மற்றும் அவரது கூட்டாளிகள் சிலரால் பாலியல் குற்றம் சுமத்தப்பட்டிருந்த கவிஞர் வைரமுத்து, கடுமையான மன உளைச்சலில் பாதிக்கப்பட்டிருந்தார். இவ்வளவு காலம் நெருங்கிப்பழகிய சிலர் கூட தனக்கு ஆதரவாக குரல் கொடுக்கவில்லையே என்கிற ஆதங்கத்தில் எழுந்த மன உளைச்சல் அது. 

இதைத் தொடர்ந்து ஓய்வு எடுத்துவிட்டு சில தினங்கள் கழித்து சென்னை திரும்பலாம் என்று மதுரைக்குப் போன வைரமுத்து திடீர் உடல்நலக்குறைவால் நேற்று அட்மிட் ஆனார்.  அவரது உடல்நல வீழ்ச்சிக்கு உணவு ஒவ்வாமையும், லோ பி.பி.யும் காரணமாக ச் சொல்லப்பட்டாலும், அவர் கடுமையான மன உளைச்சலில் இருந்ததே முக்கிய காரணம் என்று அவருக்கு எடுத்து உணர்த்திய அப்பல்லோ டாக்டர்கள் அவர் சினிமாவுக்கு பாட்டு எழுதுவது உட்பட்ட திரைத்துறை வேலைகளுக்கு சில காலம் ஓய்வு கொடுத்துவிட்டு அமைதியான மனநிலையில் இருக்கவேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளதாக தெரிகிறது. ஸோ கவிஞருக்கு நெக்ஸ்ட் தேவை ரெஸ்ட்... 

click me!