பாகுபலி மேல் உள்ள காதலை...பத்திரிகையாளர் சந்திப்பில் வெளிப்படுத்திய அனுஷ்கா...

 
Published : Apr 09, 2017, 05:30 PM ISTUpdated : Sep 19, 2018, 03:08 AM IST
பாகுபலி மேல் உள்ள காதலை...பத்திரிகையாளர் சந்திப்பில் வெளிப்படுத்திய அனுஷ்கா...

சுருக்கம்

anushka propose the love in pressmeet

உலக அளவில் சாதனை செய்து தனக்கென தனி அங்கீகாரத்தை பெற்ற படம் பாகுபலி. இந்த திரைப்படத்தின் முதல் பாகம் மாபெரும் வெற்றிபெற்றது இந்நிலையில் இன்னும் சில நாட்களில் இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகமும் வெளியாகவுள்ளது.

அதன் காரணமாக படக்குழுவினர் படத்தின் பிரோமோஷான் நிகழ்ச்சிகளில் தற்போது கவனம் செலுத்தி வருகின்றனர். 

இதன் ஒருபகுதியாக, சென்னையில் இன்று காலை 'பாகுபலி 2 ' படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பும் மாலை இசை வெளியீட்டுவிழாவும் நடைபெற உள்ளது.

காலை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள அனுஷ்கா, தமன்னா, பிரபாஸ், ராணா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், படத்தின் இயக்குனர் ராஜமௌலி மற்றும் ஒட்டு மொத்த படக்குழுவினரும் கலந்து கொண்டனர்.

அனைவரும் மிகவும் சாதாரணமாக உடை அணிந்திருந்த நிலையில், 'பாகுபலி 2 ' பாகத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள அனுஷ்கா தான் எந்த அளவிற்கு இந்த படத்தை நேசிக்கிறான் என வெளிப்படுத்துவதற்கு  பாகுபலி முத்திரை பதித்த ஆடையை அணிந்து வந்திருந்தார். 

அதே போல் அந்த ஆடையில் பாகுபலி என பெயரும் பொறிக்க பட்டிருந்தது. இதை பார்த்த பத்திரிகையாளர்கள் பாகுபலி மேல்உள்ள காதலை வெளிப்படுத்த இந்த ஆடையை என கேட்டதற்கு ஆமாம் என சொல்லி அனைவரையும் அசர வைத்து விட்டாராம் அனுஷ்கா.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மீண்டும் இணையும் மாஸ் கூட்டணி! 'அகண்டா 3' குறித்த அதிரடி அறிவிப்பு; கொண்டாட்டத்தில் பாலகிருஷ்ணா ரசிகர்கள்!
பவன் கல்யாணுக்காக ராம் சரண் தியாகமா? ரிலீஸ் தேதியை மாற்றிய 'கேம் சேஞ்சர்' நாயகன்; ரசிகர்கள் கவலை!