கொடி நாயகி அனுபமா வரைந்த ஓவியம்..ஒன்னொன்னும் சொல்லி அடிக்குதே!!

By Kanmani P  |  First Published Feb 4, 2022, 6:27 PM IST

 அனுபமா பரமேஸ்வர் ஓவியம் வரையும் இன்ஸ்ட்டா போஸ்டை வெளியிட்டுள்ளார்..அதில் அவர் வரைந்த புகைப்படங்களை ஸர் செய்துள்ளார் அனுபமா.


நடிகை சாய் பல்லவி, மடோனா செபாஸ்டியன், ஆகியோர் நடிப்பில் வெளியான 'ப்ரேமம்' மலையாள படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர், அனுபமா பரமேஸ்வரன்.

இந்த படத்தை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், உள்ளிட்ட மொழி படங்களில் நடிக்க துவங்கினார். தமிழில் நடிகர் தனுஷ் ஜோடியாக 'கொடி' படத்தில் நடித்தார். இந்த படத்திற்கு பின் நிரந்தர கதாநாயகியாக தமிழில் உருவாகலாம் என்கிற இவருடைய நினைப்பு தவறாய் போனது.

Tap to resize

Latest Videos

அவருடைய எதிர்பார்ப்புக்கு ஏற்ற வெற்றி கிடைக்கவில்லை. தமிழ் படங்களில் நடிக்கும் வாய்ப்புகளும் அவருடைய கதவை தட்ட வில்லை. இதனால் தெலுங்கு பக்கம் சாய்ந்தார்,  அவர் நடித்த 'தேஜ் ஐ லவ் யூ', 'உன்னடி ஒகடே சிந்தகி', ' ஹலோ குரு ப்ரோமோ', 'கோஸ்வரம்',   ஆகிய தெலுங்கு படங்கள் தொடர் தோல்வியை சந்தித்தாலும், இவருடைய கவர்ச்சிக்கு தெலுங்கில் கொஞ்சம் மவுசு உள்ளதால் சில படங்கள் இவர் கைவசம் உள்ளன.

தமிழிலும் தள்ளி போகாதே, மற்றும் தலைநகரம் 2 ஆகிய படங்களில் கமிட் ஆகியுள்ளார். அந்த வகையில்  4 தெலுங்கு படம் 2 தமிழ் படம் என அரை டஜன் படங்களுடன் பிசியாக நடித்து வருகிறார். விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வசீகரித்து வரும் அனுபமா பரமேஸ்வரன் தற்போது கியூட் ரியாக்ஷன் மூலம் ரசிகர்களை ஈர்த்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் தான் இவை...நடிகை  அனுபமா பரமேஸ்வர் .. துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான குரூப் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.

தற்போது அவுட் பிட்டில் முன்னும்பின்னும் சொக்கும் கொடி நாயகி அனுபமா பரமேஸ்வரின் புகைப்படங்கள் செம ட்ரெண்டாகி வருகிறது...அனுபமா பரமேஸ்வர் ஓவியம் வரையும் இன்ஸ்ட்டா போஸ்டை வெளியிட்டுள்ளார்..அதில் அவர் வரைந்த புகைப்படங்களை ஸர் செய்துள்ளார் அனுபமா.

 

click me!