
Antony Varghese Kattalan First Look : க்யூப்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் சார்பில் ஷெரீப் முஹம்மது தயாரிக்கும் மாபெரும் ஆக்ஷன் திரில்லர் படமான “காட்டாளன்” படத்தின், அதிரடி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் முன்னணி நடிகர் ஆண்டனி வர்கீஸுன் மிரட்டல் தோற்றம் ரசிகர்களைக் கவர்ந்துள்ளர். ஆக்ரோஷம் நிறைந்த கண்கள், சிதறிய சிவப்பு முடி, வாயில் சிகார் என, ஆண்டனியின் அதிரடி லுக், படம் மீதான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.
அதே போல் ரத்தம் பூசப்பட்ட முகம், கைகள் இந்த படம் ஒரு அதிரடி ஆக்ஷன் களத்தை கொண்ட படம் என்பதை உறுதி செய்கிறது, இதுவரை கண்டிராத மிரட்டலான தோற்றத்தில் நடித்துள்ளார் ஆண்டனி. மார்கோ படத்திற்கு பின், “காட்டாளன்” படம் க்யூப்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் ஷெரீப் முஹம்மது தயாரிக்கும் மற்றொரு மிகப்பெரிய படைப்பாக உருவாகி உள்ளது. இந்த படத்தை அறிமுக இயக்குநர் பால் ஜார்ஜ் என்பவர் இயக்கி உள்ளார். “காட்டாளன்”, மலையாளத் திரையுலகில் இதுவரை இல்லாத அளவுக்கு பிரமாண்ட படைப்பாக இருக்கும் என பட பூஜையின் போது படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
70th Filmfare Awards 2025: 'குச் குச் ஹோதா ஹை' தருணத்தை மீண்டும் உருவாக்கிய ஷாருக், கஜோல்
பான்-இந்தியா பிரம்மாண்டம் என்ற கான்செப்டில் உருவாகும் இந்தப் படம் மிகப்பெரிய அளவில் தயாராகிறது. தாய்லாந்தில் நடந்த அதிரடி காட்சிகள் படப்பிடிப்பின் போது, யானை சம்பந்தமான காட்சியில் ஆண்டனி காயம் அடைந்தார். உலகப் புகழ் பெற்ற “Ong-Bak” படத்தொடரின் ஆக்ஷன் இயக்குநர் கேச்சா காம்பக்டீ மற்றும் அவரது நிபுணர் குழுவே இந்த ஆக்ஷன் காட்சிகளை அமைத்துள்ளனர். இதில் குறிப்பிடத்தக்கது என்னவெனில், “Ong-Bak” படத்தில் புகழ்பெற்ற யானை பொங் இதிலும் நடித்துள்ளது.
படத்திற்கான இசையை “காந்தாரா”, “மகாராஜா” போன்ற ஹிட் படங்களுக்கு இசையமைத்த B. அஜனீஷ் லோக்நாத் வழங்கியுள்ளார். இதில் தெலுங்கு நடிகர் சுனில் (Pushpa, Jailer 2), கபீர் துகான் சிங் (Marco), ராப்பர் பேபி ஜீன், தெலுங்கு நடிகர் ராஜ் திரண்டாசு (Pushpa), பாலிவுட் நடிகர் பார்த்த் திவாரி (Kill movie fame) ஆகியோர் நடிக்கின்றனர். மலையாளத் திரையுலகிலிருந்து ஜகதீஷ், சித்திக், மற்றும் VLogger-பாடகி ஹனான் ஷா இணைந்துள்ளனர்.
பசிக்குது, சமைக்கவும் எதுவுமில்ல, பாலுக்கும் வழியில்ல; தனியாக ஃபீல் பண்ணும் மீனா, அய்யோ பாவம்!
இந்த படத்திற்கு திரைக்கதை ஜோபி வர்கீஸ், பால் ஜார்ஜ், மற்றும் ஜெரோ ஜேக்கப் ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர்; உரையாடலை உன்னி ஆர் எழுதியுள்ளார். படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.