Annaatthe song : அடடா..வருத்தத்தில் இருக்கும் ரஜினி ரசிகர்களுக்கு ஆறுதல் தந்த அண்ணாத்தே..

Kanmani P   | Asianet News
Published : Jan 19, 2022, 04:14 PM ISTUpdated : Jan 19, 2022, 05:10 PM IST
Annaatthe song : அடடா..வருத்தத்தில் இருக்கும் ரஜினி ரசிகர்களுக்கு ஆறுதல் தந்த அண்ணாத்தே..

சுருக்கம்

Annaatthe song : அண்ணாத்தேபடத்தில் பாடல்கள் அனைத்தும் பட்டையை கிளப்ப தற்போது டைட்டில் சாங் அண்ணாத்த அண்ணாத்த 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்து வெற்றி நடைபோடுகிறது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிப்பில்  தற்போது திரையரங்குகளில் ஓடி வரும் படம் அண்ணாத்த. முழுக்க முழுக்க எமோஷன் கலந்த படமாக உருவாகியுள்ள இந்த படம் 90 s ரஜினியை ஞாபகப்படுத்துவதாகவே உள்ளது என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். அண்ணன்- தங்கை  உறவை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த படம் முதல் நாளில் நல்ல வசூலை பெற்றுக்கொடுத்தது. ஆனால் ரஜினியின் ரசிகர்களுக்கு போதுமான தீனியை இந்த படம்கொடுக்கவில்லை என்றே தெரிகிறது. சமீபகாலமாக காலா, கபாலி, பேட்டை என தொடர்ந்து ஆக்சன் கதாப்பாத்திரங்களில் பிரதிபலித்த ரஜினி திடீரென மீண்டும் சென்டிமெண்டில் நுழைந்திருப்பது திருப்தி அளிக்கவில்லை என்றே பலரும் தெரிவித்து வருகின்றன. இந்த படம் பெண் ரசிகர்களை பெருதும் கவர்ந்திருந்தாலும், இளைஞர்கள் மத்தில் போதுமான வரவேற்பை பெறவில்லை என  ரசிகர்களின் கமெண்ட் சொல்கிறது. 

முழுக்க முழுக்க செண்டிமெண்ட் படமாக உருவாகியுள்ள இதில் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, குஷ்பு, மீனா, சூரி ,பிரகாஷ் ராஜ் என நட்சத்திர பட்டாளமே களமிறங்கி இருந்தது.  கொரோனா ஊரடங்கு, படக்குழுவினருக்கு கொரோனா தொற்று என தாமதமான "அண்ணாத்த" சன் பிக்சர்ஸின் பிளான் படி தீபாவளி வெடியாக ரிலீசானது. 

டி இமான் இசையில் இந்த படத்தில் பாடல்கள் அனைத்தும் பட்டையை கிளப்ப ற்போது டைட்டில் சாங் அண்ணாத்த அண்ணாத்த 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்து வெற்றி நடைபோடுகிறது என படக்குழு அறிவித்துள்ளது.

ரஜினி மக்கள் ஐஸ்வர்யா -தனுஷ் பிரிவு குறித்து கவலையில் உள்ள ரஜினி ரசிகர்களுக்கு ஆறுதல் தரும் விதமாக இந்தத்தகவல் அமைத்துள்ளதென ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பிரஜனுக்கு சம்பளத்தை கிள்ளி கொடுக்காமல் அள்ளிக் கொடுத்த பிக் பாஸ்... அடேங்கப்பா இத்தனை லட்சமா?
ஓவர் பில்டப்போடு வந்து புஸ்ஸுனு முடிந்த புதுச்சேரி மாநாடு..! விஜய் பேசியது என்ன? தளபதியின் முழு ஸ்பீச் இதோ