Annaatthe நெட்ஃப்ளிக்ஸில் முதல் இரண்டு இடங்களை பிடித்த அண்ணாத்த ? எந்த எந்த மொழியில் தெரியுமா?

Kanmani P   | Asianet News
Published : Dec 01, 2021, 10:02 AM ISTUpdated : Dec 01, 2021, 10:09 AM IST
Annaatthe நெட்ஃப்ளிக்ஸில் முதல் இரண்டு இடங்களை பிடித்த அண்ணாத்த ? எந்த எந்த மொழியில் தெரியுமா?

சுருக்கம்

Annaattheஅண்ணாத்த படம் நெட்ஃப்ளிக்ஸ் இணையதளத்தில் அதிக நபர்கள் பார்த்த படமாகவும்  முதல் இரண்டு  இடங்களில் ட்ரெண்டாகி வருவதாகவும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.  

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் அண்ணாத்த. முழுக்க முழுக்க செண்டிமெண்ட் படமாக உருவாகியுள்ள இதில் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, குஷ்பு, மீனா, சூரி ,பிரகாஷ் ராஜ் என நட்சத்திர பட்டாளமே களமிறங்கி இருந்தது. கொரோனா ஊரடங்கு, படக்குழுவினருக்கு கொரோனா தொற்று என தாமதமான "அண்ணாத்த" சன் பிக்சர்ஸின் பிளான் படி தீபாவளி வெடியாக ரிலீசானது. 

இதற்கிடையே அண்ணாத்த படம் தயாரிப்பு நிறுவனம் எதிர்பார்த்த வசூலைகொடுக்கவில்லை என சொல்லப்படுகிறது. தியேட்டர் வெளியீட்டிற்குப்பிறகான டிஜிட்டல் உரிமையை படத்தை தயாரித்த சன் நெக்ஸ்ட் நிறுவனமும், நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியிருந்தது. அதன்படி 20 நாட்கள் கழித்து  சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்திலும், நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்திலும் ‘அண்ணாத்த’ வெளியாகியிருக்கிறது.

ரசிகர்கள் போதிய ஆதரவு கிடைக்காத காரணத்தால் தான் அண்ணாத்த குறுகிய காலத்திலேயே இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதோடு ரசிகர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பாக இருந்த சிம்புவின் மாநாடு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதுவும் ரஜினி படம் விரைவில் ஓடிடிக்கு போக ஒரு காரணம் என சொல்லப்பட்டது.

இதனையடுத்து, இந்த படம் வெளிநாடுகளில் வசூலில் சொதப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த திரைப்படம் வெளிநாட்டில் 45 கோடி தான் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அண்ணாத்த படம் நெட்ஃப்ளிக்ஸ் இணையதளத்தில் அதிக நபர்கள் பார்த்த படமாகவும்  முதல் இரண்டு  இடங்களில் ட்ரெண்டாகி வருவதாகவும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.  இதில் முதல் இடத்தை அண்ணாத்த (தமிழ்), 2-ம் இடத்தை (இந்தி), 9 வது இடத்தில் அண்ணாத்த (தெலுங்கு ) இடம் பிடித்துள்ளது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

என்னுடைய மகனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பா? கொந்தளித்த கோமதி: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!
நடிகை தாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விய்யூர் சிறைக்கு மாற்றம்; நடிகர் திலீப் விடுதலை!