
தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் பிஸியாக நடித்து வரும் நடிகை அஞ்சலிக்கும், நடிகர் ஜெய்க்கும் காதல் என்று கிசுகிசுக்கள் பரவின. பின்னர் இருவரும் பிரிந்து விட்டதாகவும் கூறப்பட்டது.
தற்போது திருமணம் செய்துகொண்டு, இவர் சினிமாவில் இருந்து ஒதுங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அஞ்சலி ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
இதில் அவர் கூறுகையில்... டப்பிங் கலைஞராக சினிமா பயணத்தை ஆரம்பித்து, அதன் பிறகு நடிகையானேன். அம்மாவுக்கு நடிகையாக ஆர்வம் இருந்தது. அது பலிக்காததால் என்னை நடிகையாக்கி கனவை நிறைவேற்றிக் கொண்டார்.
நான் திருமணம் செய்து கொண்டு, சினிமாவை விட்டு விலகப் போகிறேன் என்று தகவல்கள் பரவி உள்ளன. இதில் சிறிதும் உண்மையில்லை. அப்படியே திருமணம் செய்து கொண்டாலும் சினிமாவில் இருந்து ஏன் விட வேண்டும். தொடர்ந்து நடிப்பேன் என கூறினார்.
மேலும் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கிறேன். கதாநாயகிக்கும் முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்க ஆர்வம் உள்ளது. புதிதாக நடிக்க வரும் நடிகைகளுக்கு நான் சொல்லும் அறிவுரை என்னவென்றால், முழுமையான நடிகை ஆவதற்கு நடிப்பில் தீவிர கவனம் செலுத்த வேண்டும். அக்கறையும் ஆர்வமும் இருக்க வேண்டும். சாதிக்கும் பிடிவாதம் இருக்க வேண்டும். நான் மற்றவர்களை நேரடியாக நடிப்பதாக பேசுகிறார்கள் அதில் உண்மை இல்லை. என்னைப்பற்றி வதந்திகள் வரும் போது ஆரம்பத்தில் வருத்தப்பட்டேன் இப்போது கண்டுகொள்வது இல்லை என்று அஞ்சலி கூறியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.