விஷால், மிஷ்கின் படத்தை மிஞ்சிய பகீர் ட்விஸ்ட்....திடீரென்று பிறந்தநாள் வாழ்த்து அனுப்பிய அனிஷா...

Published : Aug 30, 2019, 01:11 PM IST
விஷால், மிஷ்கின் படத்தை மிஞ்சிய  பகீர் ட்விஸ்ட்....திடீரென்று பிறந்தநாள் வாழ்த்து அனுப்பிய அனிஷா...

சுருக்கம்

விஷாலின் திருமணம் நடக்கப்போவதில்லை. அவரும் அவருக்கு நிச்சயிக்கப்பட்ட அனிஷாவும் நிரந்தரமாகப் பிரிந்துவிட்டார்கள் என்று நாடெங்கும் கிசுகிசுக்கள் நடமாடிவந்த நிலையில் இன்று தனது வருங்கால கணவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் அனுப்பியிருக்கிறார் அவர்.திருமணம் நின்றுவிட்டது என்று மகிழ்ச்சியில் திளைத்துக்கொண்டிருந்த விஷால் இந்த எதிர்பாராத திருப்பத்தால் திகைத்துப்போய் இருக்கிறார்.

விஷாலின் திருமணம் நடக்கப்போவதில்லை. அவரும் அவருக்கு நிச்சயிக்கப்பட்ட அனிஷாவும் நிரந்தரமாகப் பிரிந்துவிட்டார்கள் என்று நாடெங்கும் கிசுகிசுக்கள் நடமாடிவந்த நிலையில் இன்று தனது வருங்கால கணவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் அனுப்பியிருக்கிறார் அவர். திருமணம் நின்றுவிட்டது என்று மகிழ்ச்சியில் திளைத்துக்கொண்டிருந்த விஷால் இந்த எதிர்பாராத திருப்பத்தால் திகைத்துப்போய் இருக்கிறார்.

சுமார் இருவாரங்களுக்கு முன்பு, விஷாலுக்கு நிச்சயம் செய்யப்பட்டிருந்த அனிஷா ரெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து அத்தனை படங்களையும் நீக்கியதால் இருவருக்கும் மணமுறிவு ஏற்பட்டதாக செய்திகள் பரவின. அதே போல் விஷாலும் தனது ட்விட்டர் பக்கத்திலிருந்த அனிஷாவின் படங்களை அந்த கருத்து வேறுபாட்டை உறுதி செய்தார். இது தொடர்பான செய்தி வட இந்திய ஊடகங்கள் வரையில் தீயாய்ப் பரவிய நிலையில் சம்பந்தப்பட்ட இருவருமே வாயத் திறக்கவில்லை.

இந்நிலையில் இன்று விஷால் தனது 43 வது பிறந்தநாளைக் கொண்டாடிவரும் நிலையில் திடீர் ட்விஸ்டாய் அவருக்கு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்து செய்தி ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில்,...இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஸ்டார்....நீ ஜொலிக்கப் பிறந்தவன்,...மாபெரும் வெற்றி உன்னைத் தேடி வந்துகொண்டிருக்கிறது. உன்னை நம்புகிறேன்.நேசிக்கிறேன்...என்று பதிவிட்டுள்ளார். ஸோ இப்பொதைக்கு இரு தரப்புக்கும் நடுவில் இருந்த பஞ்சாயத்து பேசி முடிக்கப்பட்டுவிட்டதாகத் தெரிகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

'கையெடுத்து கும்புடுறேன்;இப்படி செய்யாதீர்கள்' - ஸ்ரீலீலா மனம் திறந்து வேண்டுகோள்!
9-ல் 8 படங்கள் தோல்வி.. பான் இந்தியா ஸ்டார் தான் கடைசி நம்பிக்கை!