
கோலிவுட் திரையுலகில் இசையமைப்பாளர்கள், ஹீரோவாக மாறும் சீசன் நடந்து வருகிறது. விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் முன்னணி ஹீரோக்கள் பட்டியலில் இணைந்துவிட்ட நிலையில்.
இளம் இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஆதியும் 'மீசையை முறுக்கு' என்ற படத்தின் மூலம் ஹீரோ ஆகிவிட்டார்.
இந்நிலையில் ராக் ஸ்டார் அனிருத் ஒருசில நடனக்காட்சிகளில் மட்டும் நடித்து வரும் நிலையில் அவர் எப்போது ஹீரோவாக மாறுவார் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
இதுகுறித்து ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அனிருத், "நம்ம வாழ்க்கையில என்னைக்குமே மியூசிக்தான் ஹீரோ' என்று கூறியுள்ளார்.
இதிலிருந்து அவர் இசையில் மட்டுமே முழு கவனம் செலுத்துவார் என்று புரிந்து கொள்ளப்படுகிறது. இதில் இருந்து அனிருத் தற்போதைக்கு நடிக்கும் ஐடியா இல்லை எனவும் தெரிகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.