
பொதுவாக ஒரே துறையை சேர்ந்த இருவருக்குள் போட்டிகள் நிறைய இருக்கும் என்றும், அவர்கள் முன்னணி இடத்தை பிடித்த பின் சேர்ந்து பணியாற்றுவதும் சந்தேகமே.
இப்படி இருக்க பிரபல இசையமைப்பாளர் அனிருத், யுவன் ஷங்கர் ராஜாவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு... நீங்கள் என் மூத்த சகோதரர் உங்கள் மீது நிறைய அன்பு வைத்திருக்கிறேன் என ட்விட் செய்துள்ளார்.
இவரின் இந்த ட்விட்டுக்கு... ரசிகர்கள் மத்தியில் லைக்குகள் குவிந்து வருகிறது. அதே நேரத்தில் இவர்களின் ஒற்றுமையும் ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.
மேலும் , தற்போது தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்துக்காக தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களான யுவன் சங்கர் ராஜா, சந்தோஷ் நாராயணன், மற்றும் அனிருத் ஆகிய மூவருமே இணைந்து பணியாற்றி உள்ளனர்.
இந்த படத்தில் யுவன் ஷங்கர் ராஜா பாடியுள்ள ‘அந்தக் கண்ண பாத்தாக்க’ என்ற பாடலும், சந்தோஷ் நாராயணன் பாடியுள்ள ‘பொலக்கட்டும் பற பற’ என்ற பாடலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.