
பிரம்மாண்ட பாகுபலிய்யின் இயக்குனர் ராஜமௌலி இசையமைப்பாளர் அனிருத்தின் இசையை வெகுவாக புகழ்ந்து தள்ளியுள்ளார்.
தனுஷ் நடித்த ‘3’ படம் மூலம் தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமானார் அனிருத், அந்த படத்தில் இடம்பெற்ற ‘ஒய் திஸ் கொலவெறி’ பாடல் மூலம் உலகளவில் பிரபலமானார் அனிருத்.
அதையடுத்து வரிசையாக பல ஹிட் பாடல்களை கொடுத்து தற்போது விஜய், அஜீத், சூர்யா, சிவகார்த்திகேயன் என முன்னணி கதாநாயகர்களின் படங்களுக்கு இசையமைத்து உச்சத்தின் உட்கார்ந்துள்ளார்.
இந்த நிலையில், அனிருத், தெலுங்கு சூப்பர் ஸ்டார் பவன் கல்யாண் நடிக்கும் 25-வது படம் மூலம் தெலுங்கில் கால் பதித்துள்ளார்.
இன்னும் பெயரிடப்படாத அந்த படத்தின் டீசர் வடிவிலான பாடல் ஒன்று பவன் கல்யாணின் பிறந்த நாளில் வெளியிடப்பட்டது. அந்தப் பாடல் பெரிய அளவில் வைரலாகி இருக்கிறது.
அந்த டீசர் பாடலைக் கேட்ட பாகுபலி இயக்குனர் ராஜமௌலி, “அந்த மெலோடிப் பாடல் மிகச் சிறப்பாக இருந்தது” என்று புகழ்ந்து டிவிட் செய்திருக்கிறார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.