டூப் போட்டு லைசென்ஸ் வாங்கிய ஹிரோ..!! கார் ஓட்டுன லட்சணத்தைப் பார்த்து லைசென்சை பறிமுதல் செய்தது போலீஸ்...!!

By Ezhilarasan BabuFirst Published Dec 18, 2019, 2:56 PM IST
Highlights

நவம்பர் 13ஆம் தேதி தனது எஸ்யூவி ரக காரை ஓட்டி வந்த ராஜசேகர் சம்சபாத் கெட்ட கோல்கொண்டா அருகே சாலையின் நடுவில் இருந்த சென்டர் மீடியனில் மோதி விபத்தை ஏற்படுத்தினார் .

டூப் போட்டுத்தான் லைசென்ஸ் வாங்கினார் நடிகர் டாக்டர் ராஜசேகர் என ஆந்திர மாநில போக்குவரத்து போலீசார் பரிந்துரைத்ததை அடுத்து அவரது ஓட்டுனர் உரிமம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .  தமிழில் இதுதாண்டா போலீஸ் திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர் டாக்டர் ராஜசேகர் ஆவார்.   குறிப்பாக நடிகர்கள் என்றாலே விலையுயர்ந்த கார்களில்  குடித்துவிட்டு தாறுமாறாக ஓட்டி  விபத்துக்களை ஏற்படுத்தி ஆளைக் கொள்ளுவது  சகஜம் என்ற  தோற்றம் உருவாகி உள்ளது. இதற்கு  தமிழ் இந்தி  என்று எந்த  விதிவிலக்கும்  இல்லை அனைத்து திரையுலகினரும் இப்படித்தான்  என்று சொல்லும் அளவிற்கு ஆந்திர மாநிலத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவரான டாக்டர் ராஜசேகரின் நடவடிக்கைகள் அமைந்துள்ளது . 

ஆந்திராவில் டாக்டர் ராஜசேகர் அவர்களின் கார் 100 மீட்டர் தொலைவில் வரும்போதே இது டாக்டர் ராஜசேகரின் கார் என்று மக்கள் புரிந்து கொள்ளும் அளவிற்கு அவர் கார் ஓட்டும் விதம்  அந்த அளவிற்கு  தாறுமாறாக இருக்குமாம் .  இதுவரை 3க்கும் அதிகமான விபத்துக்களை அவர் ஏற்படுத்தி இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது .  இந்நிலையில் கடந்த நவம்பர் 13ஆம் தேதி தனது எஸ்யூவி ரக காரை ஓட்டி வந்த ராஜசேகர் சம்சபாத் கெட்ட கோல்கொண்டா அருகே சாலையின் நடுவில் இருந்த சென்டர் மீடியனில் மோதி விபத்தை ஏற்படுத்தினார் .  அதில் அவரது கார் உருண்டு தலைகுப்புற கவிழ்ந்தது,  அதில்  ராஜசேகர் சிறு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார் .  இந்த வழக்கை விசாரித்த ஹைதராபாத் போக்குவரத்து பொலிசார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர் . 

அதில் நடிகர் ராஜசேகருக்கு கார் ஓட்டுவது பற்றிய அடிப்படை அறிவை இல்லை ,  அவர் திரைப்படத்தில் நடிப்பதை போல தனக்கு வேறு ஆளை தயார் செய்துதான்  லைசென்ஸ் வாங்கி இருக்க வேண்டும் எனவும்,  அதுதவிர சாலை விதிகள் பற்றியும் அவருக்கு எதுவுமே தெரியவில்லை .  ஆகவே ஒரு ஓட்டுநர் உரிமத்தை திரும்ப பெற வேண்டும் என அறிக்கையை கூறியுள்ளனர் . அதை ஏற்ற  அந்திர மாநில போக்குவரத்து ஆணையம்,  நடிகர் டாக்டர் ராஜசேகரின் லைசன்ஸ் கேன்சல் செய்துவிட்டதாக தெரிவித்துள்ளது .  சினிமாவில்  காக்கி உடையில் நடித்து இதுதாண்டா போலீஸ் என கம்பீரமாக வசனம் பேசுய ராஜ சேகருக்கு  இதுதாண்டா உண்மையான போலீஸ் என ஆந்திர போலீஸ் நிரூபித்து காட்டியுள்ளது. 

click me!