தொகுப்பாளர் ஆவதற்கு முன் புடவை விற்றாரா... ரக்சன்..?

 
Published : Jan 12, 2018, 07:40 PM ISTUpdated : Sep 19, 2018, 01:49 AM IST
தொகுப்பாளர் ஆவதற்கு முன் புடவை விற்றாரா... ரக்சன்..?

சுருக்கம்

anchor rakshan before sale in sarees

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'கலக்கப் போவது யாரு' நிகழ்ச்சியின் சீசன் 5 நிகழ்ச்சியை, தொகுத்து வழங்கியதன் மூலம் அனைவராலும் அறியப்பட்டு பிரபலமானவர் ரக்சன். தற்போது 27 வயதாகும் இவர் தொகுப்பாளினி ஜக்குலின் உடன் இணைந்து தொகுத்து வழங்கி வந்த இந்த நிகழ்ச்சி பலருக்கு பிடித்த காமெடி நிகழ்ச்சி எனலாம். 

நடுத்தர குடும்பத்தில் பிறந்த இவருக்கு சிறு வயதில் இருந்தே நடிப்பு மீது  ஆர்வம் அதிகமாம். சிறு வயதிலேயே தந்தையை இழந்த இவர், சினிமா மீது கொண்ட ஆர்வத்தால் பி.எஸ்.சி விஷுவல் கம்யூனிகேஷன் படித்தார். 

படிப்பை முடித்தவுடன் சில காலம் வேலை கிடைக்காததால், குடும்ப கஷ்டத்தை உணர்ந்து புடவை வியாபாரம் செய்துள்ளார். பின்னர் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி சினிமா கம்பெனிகள் பலவற்றில் ஏறி  இறங்கினாராம். அப்போதுதான் 'காதல் தேவதை' படத்தில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்துள்ளது.ஆனால் இந்தப் படம் பெரிதாக வெற்றி பெறாததால் இது வரை இவர் திரைப்படத்தில் நடித்தது கூட பலருக்கு தெரியாது.

பின்னர் ராஜ் டிவியில் தொகுப்பாளராக இவருக்கு வேலை கிடைத்தது. அதில் இருந்து கலைஞர், இப்போது விஜய் என தொகுப்பாளராக தன்னை வெற்றிப் பாதையில் நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். 

தற்போது இவருக்கும் சில படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாம். அதே போல் இவருடன் தொகுத்து வழங்கி வந்த ஜாக்குலின் நயன்தாரா நடித்து வரும் 'கோலமாவு கோகிலா' படத்தில் நயனுக்கு தங்கையாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!