பிரபல தொகுப்பாளினி ஐஸ்வர்யா எங்கு எப்படி இருக்கிறார்...? நீங்களே பாருங்கள்..!

 
Published : Feb 13, 2018, 03:14 PM ISTUpdated : Sep 19, 2018, 01:57 AM IST
பிரபல தொகுப்பாளினி ஐஸ்வர்யா எங்கு எப்படி இருக்கிறார்...? நீங்களே பாருங்கள்..!

சுருக்கம்

anchor aishwarya updated news

தொகுப்பாளினி
ஒரு காலத்தில் பிரபல தொகுப்பாளினியாக இருந்தவர் ஐஸ்வர்யா.நடன நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அடியெடுத்து வைத்து இவர், அதன் பிறகு பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக சேர்ந்தார்.

திருமணம்
இவர் பேசும் தமிழுக்கும், இவரின் அழகுக்கும், இவரின் நடனத்துக்கும் ரசிகர்கள் ஏராளம்.தொகுப்பாளினியாக மட்டுமில்லாமல் சீரியலிலும் கால் பதித்தவர்.கடந்த சில வருடங்களுக்கு முன்புதான் இவருக்கு திருமணம் நடைபெற்றது.அதன் பிறகு இவர் என்ன ஆனார் என்று தெரியாமல் இருந்தது.
இந்நிலையில் ஐஸ்வர்யா தற்போது எங்குள்ளார் என்பது பற்றிய தகவல் வெளிவந்துள்ளது.

Mrs இந்தியா USA

திருமணத்திற்கு பிறகு கணவருடன் அமெரிக்காவில் செட்டிலாகி விட்டார் ஐஸ்வர்யா. அங்கு நடந்த அழகி போட்டியில் Mrs இந்தியா USA என்ற பட்டத்தையும் வென்றிருக்கிறார். திருமணம் ஆனதும் குண்டாக ஆன இவர் கடுமையாக உடற்பயிற்சி செய்து பழைய நிலைக்கு திரும்பி அழகி போட்டியில் கலந்து பட்டத்தையும் வென்றிருக்கிறார்.

கமல்

இந்நிலையில் ஹார்வர்டு பல்கலையில் உரையாற்றுவதற்காக அமெரிக்கா சென்றிருந்த கமலை, ஐஸ்வர்யா நேரில் சந்தித்திருக்கிறார். மேலும் தான் வரைந்த ஓவியத்தில் கமல்ஹாசனிடம் காட்டி அவரது கையொப்பத்தையும் பெற்றிருக்கிறார்.முருகன் வேடத்தில் வைரலான கமல்ஹாசனை வரைந்தது இவர்தான்.

மேலும் ஐஸ்வர்யா எதற்காக இப்படி வரைந்தார் என்பதற்கான காரணத்தை தமது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அய்யய்யோ மீனா கண்டுபிடிச்சிட்டாளே... சீட்டிங் பண்ணி சிக்கிய ரோகிணி - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
அஞ்சானை அரெஸ்ட் பண்ண உத்தரவா? கைது நடவடிக்கை பற்றி உண்மையை போட்டுடைத்த லிங்குசாமி