தயாரிப்பாளராக மாறும் எமி ஜாக்சன்...

 
Published : Mar 31, 2017, 06:27 PM ISTUpdated : Sep 19, 2018, 03:05 AM IST
தயாரிப்பாளராக மாறும் எமி ஜாக்சன்...

சுருக்கம்

amy jackon introduce in producer

"மதராசபட்டினம்" படத்தில் கதாநாயகியாக அறிமுகம் கொடுத்த எமி தற்போது முன்னணி கதாநாயகிகள் படங்களில் நடித்து வந்ததையும் தாண்டி தற்போது சூப்பர் ஸ்டார் படத்திலும் நாயகியாக நடிக்கிறார்.

எமிஜாக்சன் தற்போது நாடியை என்பதையும் தாண்டி  தயாரிப்பாளராக மாறியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இவர் தயாரிக்கவிருப்பது திரைப்படம் அல்ல என்பதும், அது ஒரு குறும்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நடிகை எமிஜாக்சன் விலங்குகள் நல ஆர்வலர் என்பது தெரிந்ததே. அந்த வகையில் விலங்குகளுக்கு எதிரான கொடுமைகளை தோலுரிக்கும் வகையில் குறும்படம் ஒன்றை எமி ஜாக்சன் தயாரிக்கவுள்ளார்.

இந்த படத்தில் எமி நடிக்கவில்லை என்றாலும் விலங்குகளுக்கு எதிராக நடந்த கொடுமைகள் குறித்த தனது அனுபவங்களை அவர் குரல் வடிவில் கூறவுள்ளார். இந்த குறும்படத்தில் சில உண்மைச்சம்பவங்களும் இணைக்கப்பட்டுள்ளதாம்.

விலங்குகள் மீதான கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இதுபோன்ற குறும்படங்கள் அவசியம் ஆகிறது என்றும், இந்த விஷயம் அனைவரும் சீரியஸாக கவனிக்கப்பட வேண்டிய ஒன்று என்றும் எமிஜாக்சன் கூறியுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!