தன் வாழ்க்கையை நாசமாக்கியவர் பற்றி மனம் திறந்த"நடிகை சார்மிளா"...

 
Published : Mar 31, 2017, 05:59 PM ISTUpdated : Sep 19, 2018, 03:05 AM IST
தன் வாழ்க்கையை நாசமாக்கியவர் பற்றி மனம் திறந்த"நடிகை சார்மிளா"...

சுருக்கம்

actress chaarmila open talk about her life

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் ஹீரோயின்னாக நடித்த நடிகைகள் பலர் இப்போது அம்மா, அண்ணி மற்றும் சீரியல் பக்கம் ஒதிங்கியுள்ளனர்.

அப்படி 90 களில் இயக்குனர் சுந்தர் ராஜனால் "ஒயிலாட்டம்" படத்தில் கதாநாயகியாக அறிமுகப்படுத்தப் பட்டவர் நடிகை சார்மிளா.

இவர் நடித்த முதல் படத்திலேயே அழகாலும், நடிப்பாலும் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். ஆனால் இவருடைய சொந்த மொழியான மலையாளத்தில் இவருக்கு பல வாய்ப்புகள் தேடிவர தமிழில் அதிக கவனம் செலுத்தவில்லை.

மலையாள சினிமாவில் இவர் முன்னணி நடிகர்களுடன் சில படங்கள் நடித்து வந்த நிலையில், வில்லன் நடிகர் 'பாபு ஆண்டனி' என்பவருடன் காதலில் விழுந்தார்... பின் இருவருக்கும் ஒரு சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு பிரிந்தனர்.

அதன் பின் மலையாள சினிமாவில் துணை இயக்குனராக பணியாற்றிய 'கிஷோர் சந்தியாவை' காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். அந்த திருமணம் தோல்வியில் முடியவே இரண்டாவதாக ராஜேஷ் என்பவரை திருமணம் செய்து சில வருடங்களிலேயே அவரிடமிருந்து விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு இவர் அளித்துள்ள பேட்டியில், தன்னுடைய சினிமா வாழ்க்கை மற்றும் திருமண வழக்கை நாசமாய் போக காரணமாக இருந்தவர் தன்னுடைய முதல் கணவர் கிஷோர் சத்தியா என குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் நான் மலையாளத்தில் முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் போது பல தமிழ் முன்னணி நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு வந்ததாகவும், நடிகர் விக்ரமுடன் நடிக்கவும் vaipugal  வந்தபோது, அப்போது தன்னை காதலித்த கிஷோர் சத்தியா அனைத்து வாய்ப்புகளையும் சிதைத்து விட்டார் என கூறியுள்ளார்.

ஒரு வேலை நான் அந்த படங்களில் நடித்திருந்தால் இன்று பல வாய்ப்புகள் தன்னை தேடி வந்திருக்கும் என ஆதங்கதோடு கூறியுள்ளார் சார்மிளா.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!