’தவறான ரத்தம் செலுத்தப்பட்டதால் என்னுடைய 75 சதவீத கல்லீரல் சேதாரமாகிவிட்டது’...அமிதாப் பச்சன் அதிர்ச்சி தகவல்...

By Muthurama LingamFirst Published Aug 21, 2019, 11:04 AM IST
Highlights

ஒரு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தபோது தவறான குரூப் ரத்தம் செலுத்தப்பட்டதால் தன்னுடைய உடல்நலம் பாதிக்கப்பட்டு மீண்டும் ஒரு முறை செத்துப் பிழைத்ததாக இந்திய சினிமாவின் நிரந்தர சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார்.

ஒரு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தபோது தவறான குரூப் ரத்தம் செலுத்தப்பட்டதால் தன்னுடைய உடல்நலம் பாதிக்கப்பட்டு மீண்டும் ஒரு முறை செத்துப் பிழைத்ததாக இந்திய சினிமாவின் நிரந்தர சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார்.

தற்போது 76 வது வயதை எட்டியிருக்கும் அமிதாப் இந்த வயதிலும் தன் வயதுக்கு ஏற்ற கேரக்டர்களில் நடித்து இளம் நடிகர்களுக்கு சவாலாக திகழ்கிறார். ஏற்கனவே தனது 37 வது வயதில் ‘கூலி’என்ற படத்தில் நடித்தபோது உயிருக்கு ஆபத்தான விபத்தை சந்தித்த அமிதாப் தற்போது கூட தான் கடுமையான கல்லீரல் பாதிப்புடன் தான் உயிர்வாழ்ந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

 தனியார் டெலிவிஷனில் கலந்துரையாடல் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்றுப் பேசிய  அமிதாப்பச்சன்  “நான் காசநோய் பாதிப்பில் இருந்து தப்பி இருக்கிறேன். ஹெபடைடிஸ் பி பிரச்சினையில் இருந்தும் மீண்டேன். எனது சொந்த வாழ்க்கை அனுபவங்களை மற்றவர்களிடம் சொல்லி உடல் பரிசோதனை செய்துகொள்வது சம்பந்தமான விழிப்புணர்வுகளை பரப்பி வருகிறேன். எனது உடலில் தவறான ரத்தம் செலுத்தப்பட்டதால் கல்லீரல் 75 சதவீதம் பாதிக்கப்பட்டது.

மீதி 20 சதவீத கல்லீரலோடுதான் நான் இப்போது உயிர் வாழ்ந்து வருகிறேன். எல்லா நோய்களுக்குமே சிகிச்சை இருக்கிறது. எனக்கு காசநோய் பாதிப்பு ஏற்பட்டது கூட 8 வருடங்கள் வரை தெரியாது. எனக்கு வந்த இந்த பாதிப்பு மற்றவர்களுக்கும் வரலாம் என்று கூறி வருகிறேன். உடல் பரிசோதனைகள் செய்து கொள்ளவில்லை என்றால் இதுபோன்ற நோய் பாதிப்புகள் உங்களுக்கு எப்போதுமே தெரியாமல் போய்விடும். அதற்கான சிகிச்சையையும் பெற முடியாது.”என்று அமிதாப்பச்சன் கூறினார்.

முன்னணி கதாநாயகிகளாக இருந்த மனிஷா கொய்ராலா, மம்தா மோகன்தாஸ், சோனாலி பிந்த்ரே ஆகியோரை புற்றுநோய் தாக்கியது. நடிகைகள் சிலர் உடல் நலம், மன நல பாதிப்புகளில் இருந்து மீண்டுள்ளனர். முன்னணி கதாநாயகிகளாக இருந்த மனிஷா கொய்ராலா, மம்தா மோகன்தாஸ், சோனாலி பிந்த்ரே ஆகியோரை புற்றுநோய் தாக்கியது. இதற்காக அவர்கள் சிகிச்சை எடுத்து குணமானார்கள். தீபிகா படுகோனே, ஆண்ட்ரியாவும் மன அழுத்தத்தில் இருந்து மீண்டதாக தெரிவித்தனர்.

click me!